For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓப்பனிங் பேட்ஸ்மென்கள் எல்லாம் ஒழுங்கா ஆடுங்க... உங்களால தான் ப்ரஷர்.. தல தோனி ஓபன் டாக்

Recommended Video

Dhoni Open Talk: ஓப்பனிங் பேட்ஸ்மென்கள் எல்லாம் ஒழுங்கா ஆடுங்க - தோனி அறிவுரை- வீடியோ

மும்பை:தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடி நெருக்கடியை குறைக்க வேண்டும் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி அறிவுரை வழங்கி இருக்கிறார்.

பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் 39வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.

கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில், 1 ரன்னில் வெற்றியை சிஎஸ்கே இழந்தது. இறுதிவரை அவுட்டாகாமல் தோனி 84 ரன்கள் குவித்தார். இறுதி கட்டங்களில் சிங்கிள்ஸ் எடுக்காதது, பிராவோவுக்கு சான்ஸ் கொடுக்காதது என இந்த போட்டியில் சர்ச்சைகள் எழுந்தன.

25 பந்துகளில் அதிரடி சதம்... மொத்தம் 20 சிக்சர்கள்..! வெளுத்து வாங்கிய அந்த வீரர் 25 பந்துகளில் அதிரடி சதம்... மொத்தம் 20 சிக்சர்கள்..! வெளுத்து வாங்கிய அந்த வீரர்

பேட்டிங் சிறப்பாக இல்லை

பேட்டிங் சிறப்பாக இல்லை

இது குறித்து தோனி கூறியிருப்பதாவது: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி விறுவிறுப்பாக இருந்தது. பெங்களூரு அணியை நெருக்கடி கொடுத்து, சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் பேட்டிங்கில் சிறப்பாக இல்லை.

நிலைத்து ஆட வேண்டும்

நிலைத்து ஆட வேண்டும்

குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் நிலைத்து ஆடும் வகையில் செயல்பட வேண்டும். ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே பெரிய ஷாட் அடிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு அவுட்டாவதால் மற்றவர்களுக்கு தான் கஷ்டம்.

திட்டமிட வேண்டும்

திட்டமிட வேண்டும்

பெரிய ஷாட்களையும், ஆட்டமிழப்பதும் மிக எளிது. அதோடு வேலை முடிந்து விட்டது என்று எண்ணாமல் திட்டமிட்டு ஷாட்களை அடிக்க வேண்டும்.

பேட்ஸ்மென் கணிப்பு

பேட்ஸ்மென் கணிப்பு

ஒரு பேட்ஸ்மேன் என்பவர் களத்தில் இறங்கியவுடன் கணித்து, சிறப்பாக விளையாட வேண்டும். அப்பொழுது தான் தொடக்க வீரர்கள், ஆட்டத்தின் பினிஷர்களாக இருப்பார்கள் என்றார்.

Story first published: Tuesday, April 23, 2019, 12:04 [IST]
Other articles published on Apr 23, 2019
English summary
CSK captain Dhoni has advised to their teammates that not to play big shots and the openers should play better to reduce the crisis.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X