For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மெய்யப்பன் பற்றி நான் அப்படி கூறவில்லை.. சிஎஸ்கே பஞ்சாயத்து பற்றி மவுனம் கலைத்த டோணி

சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்த விசாரணையில் நான் கூறியதாக சொல்லப்பட்ட சில விஷயங்கள் பொய் என தற்போது கூறியிருக்கிறார் டோணி.

By Shyamsundar

டெல்லி: 2013ல் நடந்த ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிஎஸ்கே அணி குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து சிஎஸ்கே அணிக்கு 2015ல் தடை விதிக்கப்பட்டது. இதன்காரணமாக 2017 வரை சிஎஸ்கே அணியால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாமல் போனது.

இந்த நிலையில் இந்த சூதாட்ட குற்றச்சாட்டு குறித்த விசாரணையின் போது நடந்த சில சம்பவங்கள் குறித்து டோணி தற்போது பேசியிருக்கிறார். மேலும் சிஎஸ்கே அணியில் நடந்த யாருக்கும் தெரியாத சில விஷயங்களையும் அவர் பேசியிருக்கிறார்.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்த விசாரணையில் நான் கூறியதாக சொல்லப்பட்ட சில விஷயங்கள் பொய் என தற்போது பகிரங்கமாக கூறியிருக்கிறார் டோணி.

 மீண்டும் வந்த சிஎஸ்கே அணி

மீண்டும் வந்த சிஎஸ்கே அணி

ஒருகாலத்தில் பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேவரைட் அணியாக இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2013ல் நடந்த ஐபிஎல்லில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிஎஸ்கே அணிக்கு 2015ல் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2017 ஐபிஎல் வரை சிஎஸ்கே அணியால் ஐபிஎல் விளையாட முடியாமல் போனது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018ல் நடக்கும் ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாடும் என்று கூறப்பட்டது.

 தல டோணியிடம் விசாரணை

தல டோணியிடம் விசாரணை

இந்த நிலையில் சிஎஸ்கே , ராஜஸ்தான் அணி மீது தடை விதிப்பதற்கு முன்பு நிறைய விசாரணைகள் நடத்தப்பட்டது. இதில் டோணியின் மீதும் குற்றச்சாட்டு இருந்ததால் அவரும் பலமுறை விசாரிக்கப்பட்டார். ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த விசாரணை தொடர்ந்தது. இந்த விசாரணைகளுக்கு அடுத்தே சிஎஸ்கே அணி மீது தடை கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் சிஎஸ்கே திரும்பி வந்துள்ள நிலையில் டோணி மீண்டும் சிஎஸ்கே அணியிலேயே விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

 மெய்யப்பனுக்கு தடை

மெய்யப்பனுக்கு தடை

அப்போது நடந்த விசாரணையின் முடிவில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசனின் உறவினரான மெய்யப்பன் என்பவருக்கு கிரிக்கெட் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அவர் சிஎஸ்கே அணியில் மிக முக்கியமான பொறுப்புகளில் இருந்தார் என கூறப்பட்டது. அது மட்டும் இல்லாமல் டோணி மெய்யப்பனைக் காப்பாற்றுவதற்காக அவருக்கு சாதகமாக பேசியதாகவும் கூறப்பட்டது.

 எல்லாமே பொய்

எல்லாமே பொய்

இந்த நிலையில் டெல்லியில் நடத்த ஒரு புத்தக வெளியிட்டு விழாவில் டோணி இதுகுறித்து பேசினார். அப்போது ''நான் விசாரணை கமிஷனில் மெய்யப்பன் குறித்து கூறியதாக சொல்லப்பட்டது தவறு. அவரை நான் கிரிக்கெட் உலகில் ஆர்வமானவர் என்று கூறினேன் என்கிறார்கள். அது தவறு. அவர் அணியில் எதோ ஒரு பொறுப்பில் இருந்தார். மற்றபடி அவர் கிரிக்கெட்டில் ஆர்வமானவர் எல்லாம் இல்லை. ஆனால் அப்போது நான் கூறியது தவறாக பரப்பப்பட்டுவிட்டது. இதனால் எனக்கு பல பிரச்சனைகள் வந்தது'' என்றார். இவரின் இந்தக் கருத்தை விசாரணை கமிஷனில் இருந்த சி.எ. சுந்தரம் என்பவரும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

Story first published: Friday, October 27, 2017, 12:30 [IST]
Other articles published on Oct 27, 2017
English summary
Indian cricketer Dhoni speaks about what he said to IPL council years back. He also added that Meiyappan has nothing to do with cricket and Chennai Super Kings team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X