தோள்பட்டை காயம் - நியூசிலாந்து டி20 தொடரில் ஷிகர் தவான் நீக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து தவான் நீக்கம்

டெல்லி : தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியா -நியூசிலாந்து இடையிலான சர்வதேச டி20 தொடரில் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஷிகர் தவானுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பீல்டிங் செய்யாமல் பெவிலியனுக்கு திரும்பினார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி வரும் 24ம் தேதி முதல் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. தற்போது இதற்கான அணியில் ஷிகர் தவான் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கான மாற்று வீரர் குறித்து பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம்

இந்தியா சுற்றுப்பயணம்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 5 சர்வதேச டி20 போட்டிகள், 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளது.

5 டி20 போட்டிகளில் மோதல்

5 டி20 போட்டிகளில் மோதல்

நியூசிலாந்துடன் முதலில் சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா மோதவுள்ளது. இதற்கான அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, தோள்பட்டை காயம் காரணமாக இதில் தவான் இடம்பெறமாட்டார் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

காயமடைந்த ஷிகர் தவான்

காயமடைந்த ஷிகர் தவான்

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற 3வது சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்ற ஷிகர் தவான், ஆரோன் பின்ச் அடித்த ஷாட்டை தடுக்க முயன்றபோது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

தவானுக்கு பதிலாக பீல்டிங் செய்த சாஹல்

தவானுக்கு பதிலாக பீல்டிங் செய்த சாஹல்

இதையடுத்து வலியால் துடித்த ஷிகர் தவான் பெவிலியனுக்கு திரும்பினார். அவருக்கு பதிலாக சாஹல் பீல்டிங் செய்தார். முன்னதாக இரண்டாவது போட்டியிலும் பேட் கமின்ஸ் வீசிய பந்து தாக்கியதில் ஷிகர் தவானுக்கு இடுப்புப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

பிசிசிஐ அறிவிக்கும்

பிசிசிஐ அறிவிக்கும்

நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா முதலில் சர்வதேச டி20 போட்டிகளை ஆடவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி நேற்று நியூசிலாந்திற்கு புறப்பட்டு சென்றநிலையில், அந்த குழுவில் ஷிகர் தவான் இடம்பெறவில்லை. இதனிடையே, ஷிகர் தவானுக்கு மாற்றாக விளையாடும் வீரர் குறித்து பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Shikhar Dhawan Ruled Out from T20I Series In New Zealand
Story first published: Tuesday, January 21, 2020, 17:14 [IST]
Other articles published on Jan 21, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X