For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லி இல்லாட்டி என்னா.. ஒவ்வொரு இந்திய வீரரும் ஒரு கோஹ்லிதான்.. ஆப்கன் கேப்டன்

பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியில் ஒவ்வொரு வீரருமே விராத் கோஹ்லிதான் என்று ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்ஸ் கூறியுள்ளார்.

விராத் கோஹ்லிக்கு பதிலாக தலைமை தாங்கும் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

விராட் கோஹ்லியின் தற்காலிக ஒய்வு குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஸ்டானிக்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவரது பேட்டியிலிருந்து:

கோஹ்லி இல்லாதது ஏமாற்றமே

கோஹ்லி இல்லாதது ஏமாற்றமே

ஆப்கானிஸ்தானுக்கெதிரான வரலாற்று சிறப்பு மிக்க போட்டியில் விராட் கோஹ்லியை எதிர் கொள்ளாதது ஏமாற்றமளிக்கிறது. ஒட்டுமொத்த இந்திய அணியும் சிறப்பானதுதான் அவர்களின் கேப்டன் விராட் கோஹ்லி போல. விராட் கோஹ்லி ஒரு அச்சுறுத்தக்கூடிய வீரர். ஆனாலும் இந்திய அணியானது ஒருவரை நம்பி மட்டும் அல்ல, அணியில் உள்ள அனைவருமே சிறப்பானவர்கள் .

கோஹ்லி இருந்திருந்தால்

கோஹ்லி இருந்திருந்தால்

விராட் கோஹ்லி அணியில் இருந்திருந்தால் இப்போட்டி மிகவும் சிறப்பானதாய் இருந்திருக்கும். இந்திய அணியை பார்க்கும்போது அனைத்து வீரர்களும் எங்களுக்கு விராட் கோஹ்லி போல தான். எங்களுக்கு விராட் கோஹ்லி அல்லது வேறொரு இந்திய வீரர் சிறப்பானவர் என்று நினைக்க தோன்றவில்லை. மாறாக ஒவ்வொரு வீரரும் சிறப்பானவர்கள் தான் விராட் கோஹ்லியை போல.

அனைவருமே பெஸ்ட்தான்

அனைவருமே பெஸ்ட்தான்

அனைத்து வீரர்களும் சிறப்பானவர்கள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த அனுபவம் உள்ளவர்கள். இந்திய அணி உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணி. இருப்பினும் எங்கள் அணிக்கெதிராக விளையாடும்போது, எங்களிடம் இருந்து சில விஷயங்களை கற்று கொள்ள முடியும்.

இந்தியாவை வீழ்த்துவது கஷ்டம்

இந்தியாவை வீழ்த்துவது கஷ்டம்

இந்திய அணி உலகின் மிகச்சிறந்த நம்பர் 1 அணி மற்றும் சொந்த மண்ணில் அவர்களை வீழ்த்துவது மிகவும் கடினம். இந்திய அணிக்கெதிரான போட்டியில் நாங்கள் சிறப்பான கிரிக்கெட் திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களுக்கு சிறப்பான போட்டியை அளிப்போம். அன்றைய தினம் திறமையாக விளையாடுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.

கற்றுக் கொள்ள வந்துள்ளோம்

கற்றுக் கொள்ள வந்துள்ளோம்

எங்களின் முழு திறமையை வெளிப்படுத்துவோம் எனவும் இந்திய அணியிடம் நிறைய கற்றுக்கொள்ளவே இங்கு வந்துள்ளோம். அதே நேரத்தில் எங்களிடம் கற்றுக் கொள்ள இந்திய அணிக்கும் சில விஷயங்கள் இருக்கின்றது. இந்திய அணியை விட சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, June 14, 2018, 14:32 [IST]
Other articles published on Jun 14, 2018
English summary
Afghanistan Skipper talks about Virat Kohli's Absense on Inagural test of Afganisthan in India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X