For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அரசு வேலைக்கு நடப்பதை விட மோசமான பிக்ஸிங்.. கொதித்து பொங்கி எழுந்த கிரிக்கெட் ரசிகர்கள்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்டது இந்திய ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது.

கபில் தேவ் தலைமையிலான மூன்று நபர்கள் குழு நேர்முகத் தேர்வு நடத்தி ஆறு பேரில் இருந்து தற்போது பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியை மீண்டும் தேர்வு செய்தது.

இது எல்லாமே டிராமா என ட்விட்டரில் ரசிகர்கள் பொங்கி வருகின்றனர். பலரும் ரவி சாஸ்திரி நியமனத்தால் இந்தியா எந்த ஐசிசி கோப்பையும் வெல்லாது என விளாசி உள்ளனர்.

ஒரு அம்பயருக்கு பந்தால் வந்த மரணம்..! சோகத்தில் மூழ்கிய உலக கிரிக்கெட் அரங்கம் ஒரு அம்பயருக்கு பந்தால் வந்த மரணம்..! சோகத்தில் மூழ்கிய உலக கிரிக்கெட் அரங்கம்

தகுதியான நபரா?

இது குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் திட்டியதில், கலாய்த்ததில் இருந்து சில பதிவுகள் இங்கே - சிறந்த அறிவு கொண்ட தேர்வுக் குழு சிறந்த நபரை இந்த இடத்திற்கு தேர்வு செய்வார்கள் என எதிர்பார்த்தேன். இப்போது ரவி சாஸ்திரி தான் இந்த இடத்திற்கு தகுதியான நபரா அல்லது கேப்டனின் விருப்பப்படி இவரை தேர்வு செய்தார்களா? என தெரியவில்லை.

ஒரு சந்தேகம்

ஒரு சந்தேகம்

கேப்டன் விருப்பம் தெரிந்து சிறந்த நபர்கள் யாரும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லையோ என்று சந்தேகம் எழுப்பி இருக்கிறார் ஒருவர். டாம் மூடி, மைக் ஹெஸ்ஸன் தவிர்த்து தேசிய அணியை வெற்றிகரமாக வழிநடத்திய அனுபவ பயிற்சியாளர்கள் பலர் விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தவறான நம்பிக்கை

இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. இந்த பாதக செயலை ஏன் பிசிசிஐ செய்தது? இந்த **** ரவி சாஸ்திரி தான் தேர்வு செய்யப் படுவார் எனும் நிலையில் தலைமை பயிற்சியாளர் ஆகலாம் என்ற தவறான நம்பிக்கையை விண்ணப்பித்த மற்றவர்களுக்கு ஏன் ஏற்படுத்த வேண்டும்? எம்எஸ்கே பிரசாத் தேர்வுக் குழு தலைவர் இல்லை. விராட் கோலி தான்..

ஆபிசர் சாய்ஸ்

கிரிக்கெட் அட்வைசரி கமிட்டி சொன்னார்கள்.. ரவி சாஸ்திரியே மீண்டும் தலைமை பயிற்சியாளராக தொடர்வார் என்று.

ஆபிசர் சாய்ஸ். (சரக்கு பெயர்!!).

யாரை சொல்கிறார் இவர்?

நல்லவன் கமென்ட்

அடுத்த சில வருடங்களுக்கு இந்திய அணியை ஆதரிக்க மாட்டேன் என் நினைக்கிறேன் என கூறி இருக்கிறார் இந்த நல்லவன்.

ஏன் இந்த செலக்ஷன் டிராமா?

ஏன் இந்த செலக்ஷன் டிராமா?

எல்லோருக்கும் தெரிந்த, கண்டுபிடிக்க முடிந்த நபர்.. கேப்டனின் விருப்பத்துக்கு உரிய நபர்.. தான் தேர்வு செய்யப் படப் போகிறார் என்றால்..

விண்ணப்பித்தவர்களுக்கு இது பெரிய அவமானம் என்று பொங்கி உள்ளார் இந்த ரசிகர்.

குறைவான பிக்ஸிங் தான்

இந்த பயிற்சியாளர் தேர்வு டிராமாவை பார்க்கும் போது.. உத்தர பிரதேச அரசு வேலைக்கு நடக்கும் நேர்முகத் தேர்வு கூட குறைவான பிக்ஸிங் தான் என்று கலாய்த்துள்ளார் இவர்.

Story first published: Saturday, August 17, 2019, 11:07 [IST]
Other articles published on Aug 17, 2019
English summary
Fans slams the selection drama over selection of Ravi Shastri for another 2 years
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X