For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஷஸ் முதல் டெஸ்ட் - இங்கிலாந்தை புரட்டி எடுக்கும் ஆஸி. அணி..!!

பிரிஸ்பேன்- பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்கியது.

Recommended Video

139 வருடமாக நடக்கும் முக்கிய போட்டி.. Ashes Series-க்கு பின்னால் இருக்கும் கதை தெரியுமா ?

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இங்கிலாந்து அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்களான ஆண்டர்சன் மற்றும் பிராட் இருவரும் முதல் டெஸ்ட்டில் இடம்பெறவில்லை.

காதலால் மலர்ந்த ’ஆஷஸ் டெஸ்ட் தொடர்’ 139 வருடமாக நடக்கும் அன்பு போர்.. பின்னால் உள்ள வரலாறு தெரியுமாகாதலால் மலர்ந்த ’ஆஷஸ் டெஸ்ட் தொடர்’ 139 வருடமாக நடக்கும் அன்பு போர்.. பின்னால் உள்ள வரலாறு தெரியுமா

ஏமாற்றம்

ஏமாற்றம்

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஆஸ்திரேலிய அணி வேகப்பந்துவீச்சாளர்கள் அனல் பறக்க பந்துவீசினர். சரியான லைனில் தொடர்ந்து வீசியதால் இங்கிலாந்து வீரர்கள் அதனை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். போட்டியின் முதல் பந்திலேயே இங்கிலாந்து தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் ஆட்டமிழந்ததால் இங்கிலாந்துக்கு தொடக்கமே ஏமாற்றத்தை தந்தது.

அணிவகுப்பு

அணிவகுப்பு

இதனைத் தொடர்ந்து டேவிட் மாலன் 6 ரன்களில் வெளியேற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஜோ ரூட் ஹேசல்வுட் பந்துவிச்சில் டக் அவுட்டானார்.இங்கிலாந்து அணியின் மானத்தை காப்பாற்றிய பென் ஸ்டோக்ஸ் வந்த வேகத்தில் நடையை கட்ட இங்கிலாந்து அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

ஹமீது

ஹமீது

ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் டெஸ்ட்டில் விளையாடும் ஹசீப் ஹமீது மட்டும் சற்று தாக்குப் பிடித்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சை தைரியமாக எதிர்கொண்டு ஷாட்களை ஆடி ரன் சேர்த்தார்.இதனால் இங்கிலாந்த ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்த நேரத்தில் அவரும் 25 ரன்களில் நடையை கட்டினார்.

தடுமாற்றம்

தடுமாற்றம்

இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஆலிவ் போப் , ஜாஸ் பட்லர் இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சற்று அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் 5 பவுண்டரிகளை விளாசி 39 ரன்கள் எடுத்த நிலையில், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் ஆனார். மறுபுறும் பொறுமையாக விளையாடிய போப் தேவையில்லாத ஷாட் ஆடி கேட்ச் அவுட் ஆனார். இதனால் இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு சுருண்டது.ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Story first published: Wednesday, December 8, 2021, 12:33 [IST]
Other articles published on Dec 8, 2021
English summary
England won the toss and choose to bat. England captain Joe root out for a duck as England struggles to score big runs
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X