For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின் சிறந்த பவுலரே இல்லை.. வம்பிழுத்த பாகிஸ்தான் சீனியர்.. ரோகித் சர்மாவால் வந்த பிரச்சினை!!

மும்பை: ரோகித் சர்மா கூறிய கருத்தால் ரவிச்சந்திரன் அஸ்வினை சிறந்த வீரர் இல்லையெனக்கூறி பாகிஸ்தான் முன்னாள் வீரர் வம்பிழுத்துள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது.

இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரிலும் முன்னிலை பெற்றது.

அவர் எங்களுக்கு வேண்டாம்..! ரோகித் எடுத்த திடீர் முடிவு..! இந்திய அணியிலிருந்து இளம் வீரர் நீக்கம்அவர் எங்களுக்கு வேண்டாம்..! ரோகித் எடுத்த திடீர் முடிவு..! இந்திய அணியிலிருந்து இளம் வீரர் நீக்கம்

அஸ்வின் சாதனை

அஸ்வின் சாதனை

இந்த போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், கபில் தேவ் -ன் மிகப்பெரிய சாதனையை முறியடித்தார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் கபில் தேவ் -ஐ ( 434 விக்கெட்டுகள் ) முந்தி அஸ்வின் ( 436 விக்கெட்டுகள் )இரண்டாவது இடம்பிடித்தார். முதலிடத்தில் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் உள்ளார்.

சிறந்த வீரர்

சிறந்த வீரர்

இதுகுறித்து பேசியிருந்த கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணிக்காக அஸ்வின் நீண்ட காலமாக விளையாடி வருகிறார். பல போட்டிகளில் வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளார். என்னைப் பொறுத்தவரையில் அஸ்வின் "ஆல் டைம் கிரேட்" எப்போதுமே சிறந்த வீரர் ஆவார். பலரும் அவர் குறித்து மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கலாம். ஆனால் எனக்கு அவர் சிறந்த வீரர் என பாராட்டித் தள்ளினார்.

சீனியர் கண்டனம்

சீனியர் கண்டனம்

இந்நிலையில் இதற்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷித் லதிஃப் கண்டனம் தெரிவித்துள்ளார். அஸ்வின் எடுத்த 436 விக்கெட்டுகளில் 306 விக்கெட்டுகள் இந்தியாவில் வந்தவை, 70 மட்டுமே அயல்நாடுகளில் வந்துள்ளது. சொந்த மண்ணை பொறுத்தவரையில் அஸ்வின் சிறந்த வீரர் என்றுக்கூறி கொள்ளுங்கள், ஆனால் அனைத்து இடங்களிலும் சிறந்தவர் என்பதை கூறாதீர்கள். அனில் கும்ப்ளே, ஜடேஜா கூட அயல்நாடுகளில் சிறப்பாக உள்ளனர். அஸ்வின் நல்ல பவுலர் கிடையாது.

 வாய் தவறி இருக்கும்

வாய் தவறி இருக்கும்

ரோகித் சர்மா எதுவும் பேசத்தெரியாமல் வாய் தவறி பிதற்றியிருப்பார் என நினைக்கிறேன். அஸ்வினை குஷிப்படுத்த வேண்டும் என எதுவேண்டுமானாலும் கூறி வருகிறார். இதனால் ரோகித் சர்மாவின் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது என காட்டமாக அஸ்வினை வம்பிழுத்துள்ளார்.

Recommended Video

IPL 2022: Rajasthan Royals Full Squad | RR Players List | OneIndia Tamil
 காரணம் என்ன

காரணம் என்ன

அஸ்வின் மீது இந்த விமர்சனங்கள் நீண்ட வருடங்களாக இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. அயல்நாடுகளில் 24 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 70 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அவருக்கு சரிவர வாய்ப்புகள் கொடுக்கப்படாததால் தான் அயல்நாட்டு ரெக்கார்ட்டுகள் மோசமாக இருப்பதாகவும், கோலியின் கேப்டன்சியில் ஜடேஜாவுக்கு தான் அயல்நாட்டில் வாய்ப்பு தந்ததாகவும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Wednesday, March 9, 2022, 16:47 [IST]
Other articles published on Mar 9, 2022
English summary
Former pakistan player Rashid Latif dissppointed with rohit sharma, after he Calling Ravichandran Ashwin All-Time Great
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X