இது பழைய டோணி கிடையாது.. இன்னும் அவர் அணிக்கு வேணுமா?.. கேள்வி கேட்கும் முன்னாள் வீரர்கள்!

Posted By:
தோனியை அணியில் இருந்து நீக்க கோரும் முன்னாள் வீரர்கள்- வீடியோ

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடச் சென்று இருக்கிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று போர்ட் எலிசபெத் நகரில் நடக்கிறது.

ஒருநாள் தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது. தற்போது 3-1 என்று முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியில் இருக்கும் சில வீரர்களின் பேட்டிங் முறை கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. முக்கியமாக டோணியின் பார்ம் கேள்விக்கு உள்ளாகி உள்ளது.

மோசமான ரோஹித்

மோசமான ரோஹித்

தவான் அடித்தால் ரோஹித் அடிக்கக் கூடாது ரோஹித் அடித்தால் தவான் அடிக்கக் கூடாது என்று இந்திய ஒப்பனர்கள் இருவரும் சபதம் எடுத்து இருக்கிறார்கள் போல. இந்த ஒருநாள் தொடரில் தவான் நன்றாக ஆடிக்கொண்டு இருக்கிறார். ஆனால் ரோஹித் சரியாக ஆடுவதில்லை. நான்கு போட்டியிலும் சராசரியாக 10 ரன் என மொத்தம் 40 ரன் மட்டும் எடுத்துள்ளார்.

எதுக்கு..?

எதுக்கு..?

அதேபோல் இந்திய மிடில் ஆர்டர் மிக மோசமாக இருக்கிறது. பாண்டியா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஆடியதோடு சரி வேறு போட்டியில் ஆடவே இல்லை. அதேபோல் ரஹானே முதல் போட்டியில் 79 ரன்கள் அடித்தார் மற்ற போட்டியில் சொதப்பினார். மேலும் கேதார் ஜாதவ், ஷ்ரேயஸ் ஐயர் இருவரில் யாரை எடுப்பது என்ற குழப்பமும் இருக்கிறது.

இருவர் மட்டும்

இருவர் மட்டும்

இந்தப் போட்டியில் கோஹ்லியும், தவானும் மட்டுமே சரியாக ஆடி இருக்கிறார்கள். இவர்கள் அடித்த ரன்களை ஒவ்வொரு போட்டியிலும் நீக்கிவிட்டுப் பார்த்தால் இந்திய அணி 50 ரன் கூட எடுத்து இருக்காது. ஸ்பின் பவுலர்கள் மட்டும் கைகொடுக்கவில்லை என்றால் இந்திய அணியின் நிலை மோசம்.

டோணி பார்ம்

டோணி பார்ம்

டோணி 50 ரன்களை கடந்து நீண்ட காலமாகிறது. இவர் அதிரடியாக ஆடியும் நீண்ட நாட்கள் ஆகிறது. சென்ற போட்டியில் மட்டும் 43 பந்தில் 42 ரன் என மிகவும் மெதுவாக அடித்தார். இதன் காரணமாகவே 300 ரன் தாண்ட வேண்டிய இந்தியா 289 மட்டுமே அடித்தது.

குழப்பம்

குழப்பம்

இதனால் டோணியின் பார்ம் குறித்து கிறிஸ் ஸ்ரீகாந்த், விவிஎஸ் லட்சுமணன் உள்ளிட்ட வீரர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இன்னும் 50 ஓவர் போட்டிக்கு டோணி தேவைதானா என்று அவர்கள் கேட்டு இருக்கிறார்கள். டோணியின் பார்ம் மிகவும் கவலை அளிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Tuesday, February 13, 2018, 15:18 [IST]
Other articles published on Feb 13, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற