For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனிக்கு மரியாதை.. கோலிக்கு ஆதரவு.. யோசிக்காமல் பரபர பதில் சொன்ன தலைவர் கங்குலி!

Recommended Video

Ganguly speaks on Dhoni | தோனிக்கு மரியாதை..பரபர பதில் சொன்ன கங்குலி!

மும்பை : பிசிசிஐ தலைவராக அதிகாரப் பூர்வமாக பதவியேற்ற கங்குலி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது தோனி, விராட் கோலி உள்ளிட்டோர் குறித்த கேள்விகளுக்கு யோசிக்காமல் பதில் அளித்தார்.

பிசிசிஐ அமைப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நிர்வாக கமிட்டியால் மட்டுமே இயங்கி வந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின் சரியான முறையில் தலைவர், செயலாளர் என அமைப்பு ரீதியாக செயல்பட உள்ளது.

சவால்கள், சிக்கல்கள்

சவால்கள், சிக்கல்கள்

பிசிசிஐ மீது இருந்த பழைய கறைகளை துடைத்து புதிய பாதையில் வழிநடத்தும் பணியை ஏற்றுக் கொண்டுள்ளார் கங்குலி. முதல் நாள் தொடங்கி அவருக்கு பல்வேறு சவால்கள், சிக்கல்கள் காத்துக் கொண்டு இருக்கிறது.

நச்சென பதில் அளித்தார்

நச்சென பதில் அளித்தார்

இதனிடையே இந்திய அணியின் மூத்த கிரிக்கெட் வீரர்கள் தோனி, கேப்டன் விராட் கோலி குறித்து கேள்வி எழுப்பினர் பத்திரிக்கையாளர்கள். அதற்கு சிறந்த உதாரணம் சொல்லி நச்சென பதில் அளித்தார் கங்குலி.

சதித்திட்டம்.. பிளாக்மெயில்.. வெடித்த சர்ச்சை.. திசை மாறும் வங்கதேச வீரர்கள் ஸ்ட்ரைக் விவகாரம்!

தோனி விடுப்பு

தோனி விடுப்பு

தோனி நீண்ட உலகக்கோப்பை தொடருக்கு பின் நீண்ட விடுப்பில் இருக்கிறார். அவர் ஓய்வு பெறுவார் என வதந்திகள் வந்தாலும் இது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அவர் மீண்டும் கிரிக்கெட் ஆடுவாரா? என்பதும் தெரியவில்லை.

தோனியிடம் பேசுவீர்களா?

தோனியிடம் பேசுவீர்களா?

இந்த நிலையில், தலைவர் பதவியில் அமர்ந்த கங்குலியிடம் தோனி நீண்ட விடுப்பில் இருப்பது குறித்து கேட்கப்பட்டது. அவரிடம் இது குறித்து பேசுவீர்களா? என கேட்கப்பட்டது.

நாட்டுக்கே பெருமை

நாட்டுக்கே பெருமை

அதற்கு பதில் அளித்த கங்குலி, தோனி என்ன நினைக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. நான் இப்போது தான் பதவி ஏற்றுள்ளேன். ஆனால், ஒரு விஷயம். தோனியின் சாதனைகள் நாட்டுக்கே பெருமை அளித்தவை என்றார்.

ஆச்சரியப்படுவீர்கள்

ஆச்சரியப்படுவீர்கள்

மேலும், தோனி என்ன செய்தார் என்பதை கணக்கிட்டுப் பார்த்தால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஒரு கட்டத்தில் என்னைக் கூட இனி இவர் அணியில் இடம் பெறுவதே கடினம் என்றார்கள். நான் மீண்டும் போராடி நான்கு ஆண்டுகள் அணியில் இடம் பெற்றேன் என்றார்.

மதிக்கப்படுவார்கள்

மதிக்கப்படுவார்கள்

சாம்பியன்கள் அத்தனை எளிதில் முடித்து விட மாட்டார்கள். நான் இருக்கும் வரை, அனைவரும் மதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார் கங்குலி. ஒருவேளை தோனி மீண்டும் தான் கிரிக்கெட் ஆட வேண்டும் என விரும்பினால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றே தெரிகிறது.

ஆதரவு உண்டு

ஆதரவு உண்டு

தற்போது கேப்டனாக இருக்கும் விராட் கோலிக்கு முழு அளவில் ஆதரவு கிடைக்கும் என்றும் கூறினார் கங்குலி. இதற்கு தன் காலத்தில் தனக்கு கிடைத்த ஆதரவை உதாரணமாக கூறினார் கங்குலி.

ஜக்மோகன் டால்மியா

ஜக்மோகன் டால்மியா

"நான் கேப்டனாக இருந்த போது ஜக்மோகன் டால்மியா தலைவராக இருந்தார். நாங்கள் கேட்டு, அது மறுக்கப்பட்டதாக எனக்கு நினைவில்லை. விராட் தற்போது கேப்டனாக இருக்கிறார். எங்களுக்கும் அதே போன்ற உறவு இருக்கும்" என்றார்.

அவரோடு தான் இருப்போம்

அவரோடு தான் இருப்போம்

மேலும், "இந்தியா சிறப்பாக ஆட அவருக்கு என்ன வேண்டுமோ அது அவருக்கு கிடைக்கும். கோலி இந்திய அணியை வேறு தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். நாங்கள் அவரோடு தான் இருக்கிறோம். அவரோடு தான் இருப்போம்" என்று முடித்தார் தலைவர் கங்குலி.

Story first published: Wednesday, October 23, 2019, 16:46 [IST]
Other articles published on Oct 23, 2019
English summary
Ganguly answers questions about Dhoni and Virat kohli in his first press conference
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X