For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த பௌலரை அடிச்சு ஆடுங்க.. இப்படி டொக்கு வைக்காதீங்க!! “கருத்தா பேசும்” கங்குலி

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் பந்தை இந்திய வீரர்கள் அடித்து ஆட வேண்டும் என கூறியுள்ளார் கங்குலி.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற சம நிலையில் உள்ளன. இரண்டு டெஸ்ட்கள் முடிந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு டெஸ்ட்களை வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் நிலை உள்ளது.

இந்த சூழ்நிலையில் கங்குலி, இந்திய அணி செய்யும் ஒரு முக்கிய தவறை சுட்டிக் காட்டியுள்ளார்.

சிறப்பாக வீசும் லியோன்

சிறப்பாக வீசும் லியோன்

இந்த டெஸ்ட் தொடரில் இது வரை சிறப்பாக பந்துவீசி வருகிறார் நாதன் லியோன். இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்கள் வீழ்த்தி இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக இருக்கிறார் நாதன் லியோன்.

இந்தியா லியோனிடம் திணறல்

இந்தியா லியோனிடம் திணறல்

இந்திய பேட்ஸ்மேன்கள் இவரது பந்துவீச்சை அணுக முடியாமல் தவித்து வருகிறார்கள். நாதன் லியோன் பந்து வீசினாலே "டொக்" வைத்து ஆடுவது என முடிவு செய்து ஆடி வருகின்றனர். ஆனால், இது கொஞ்சம் அதிகப்படியாகவே இருக்கிறது என்கிறார் கங்குலி. மேலும், கோலி தன் விக்கெட்டை லியோனிடம் இழப்பதை பற்றியும் தன் கருத்தை கூறியுள்ளார்.

கங்குலி கருத்து

கங்குலி கருத்து

"நான் கோலிக்கு இதை பற்றி குறுந்தகவல் அனுப்பலாமா என யோசித்துக் கொண்டு இருந்தேன். ஆனால், அனுப்பவில்லை. அவர் இந்தியாவிற்கு வெளியே சுழற் பந்துவீச்சாளர்களிடம் தன் விக்கெட்டை இழந்து வருகிறார். நாதன் லியோன் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் தான். ஆனால், அவரைப் போலவே தான் வார்னே, முரளிதரன், ஸ்வான் போன்றோரும்" என கூறினார்.

லியோனை அடிச்சு ஆடுங்க

லியோனை அடிச்சு ஆடுங்க

மேலும், "இந்திய பேட்ஸ்மேன்கள் லியோனுக்கு அதிக மரியாதை கொடுத்து, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்துகளை கூட தடுத்து ஆடி வருகிறார்கள். ஆனால், அவரை நாம் அடித்து ஆட வேண்டும். 300 - 350 ரன்கள் எடுக்க முயற்சி செய்ய வேண்டும்" என கூறினார்.

பாய்ஸ்! ஒழுங்கா கங்குலி சொல்ற மாதிரி டொக்கு வைக்காம அதிரடியா ஆடுங்க!!

Story first published: Thursday, December 20, 2018, 18:39 [IST]
Other articles published on Dec 20, 2018
English summary
Ganguly feels Indian batsmen defensive play against Nathan Lyon is too much
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X