For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ.பி.எல். போட்டிகளில் அதிகமுறை 'டக் அவுட்' - முதலிடம் பிடித்த 'கவுதம் கம்பீர்!

By Mathi

ஷார்ஜா: ஐ.பி.எல். போட்டிகளில் அதிகமுறை ரன் ஏதும் எடுக்காமல் 'டக் அவுட்' ஆன "நாயகர்களின்" பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர்!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2012-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் கேப்டன் கவுதம் கம்பீர். ஹீரோவாக திகழ்ந்த அவர் ஜீரோவாகி கொண்டிருக்கிறார்.

7-வது ஐ.பி.எல். சீசனில் இன்னமும் ரன் கணக்கை தொடங்காத ஒரே நட்சத்திர பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் தான்.

Gautam Gambir completed hat trick of ducks

மும்பைக்கு எதிரான போட்டி..

மும்பைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 8 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காத அவர் மலிங்காவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார்.

டெல்லிக்கு எதிரான ஆட்டம்..

அதேபோல் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 4 பந்தில் ரன் எடுக்காத நிலையில், நாதன் கவுல்டர் நிலேவின் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

பெங்களூருக்கு எதிராகவும் டக்

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் டக்-அவுட் ஆகி "ஹாட்ரிக்" சாதனை படைத்தார். இதில் மிட்செல் ஸ்டார்க்கின் ஓவரில், எதிர்கொண்ட முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். மூன்று ஆட்டங்களிலும் அவரை வெளிநாட்டை சேர்ந்த பவுலர்களே காலி செய்து இருக்கிறார்கள்.

டக் அவுட் ஹாட்ரிக் மன்னன்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 'டக்-அவுட்'டில் ஹாட்ரிக் படைத்த மோசமான வீரர் கவுதம் கம்பீர்தான்.

10 முறை டக் அவுட்

மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக முறை டக்-அவுட் ஆன பரிதாபமானவர்களின் வரிசையிலும் முதலிடத்தை பிடித்துள்ளார் கம்பீர். அவர் 91 ஆட்டங்களில் 10 முறை ரன் ஏதுமின்றி டக்-அவுட்டில் வீழ்ந்திருக்கிறார்.

மிஸ்ரா- காலிசுக்கு 2வது இடம்

2-வது இடத்தை தற்போது ஹைதராபாத் அணிக்காக ஆடி வரும் அமித் மிஸ்ராவும் கொல்கத்தாவுக்காக விளையாடும் காலிசும் தலா 9 டக்குடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

Story first published: Friday, April 25, 2014, 10:00 [IST]
Other articles published on Apr 25, 2014
English summary
Gautam Gambhir has scripted a dubious record. The former Indian opener completed a hattrick of ducks when the Kolkata Knight Riders skipper failed to open his account against Royal Challengers Bangalore in an Indian Premier League match in Sharjah on Thursday night.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X