For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரும் கேட்காத ஒன்றை கேட்ட அந்த ரசிகை… மைதானத்தில் அதிர்ந்த தல தோனி.. வைரல் புகைப்படம்

கொல்கத்தா: என்னை உங்களின் மூத்த மகளாக தத்தெடுத்து கொள்ளுங்கள் என்ற ரசிகையின் வேண்டுகோளால் அதிர்ந்து போனார் தல தோனி.

உலகம் எங்கிலும் தல தோனியின் ரசிகர்கள், யெல்லோ ஆர்மி என்ற பெயருடன் வலம் வரும் ரசிகர்கள் அதிகம். அதிலும் ஐபிஎல் தொடரில் அவரை கண்டால் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் தனி ரகம்.

ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் சிலர் சுற்றி, சுற்றி வந்து வைரலாகினர். இன்றளவும் தோனிக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் தனியாக இருக்கிறது.

உலக கோப்பைக்கான இந்திய அணியில் யார்? யார் உள்ளனர்...? கடைசி கட்ட சஸ்பென்ஸ்

பெண் ரசிகை

பெண் ரசிகை

இந்நிலையில் கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற சம்பவம்... தோனி உள்பட பலரையும் திணறடித்தது. அந்த போட்டியில் தோனியின் பெண் ரசிகை ஒருவரின் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேனருடன் ரசிகை

பேனருடன் ரசிகை

அந்த ரசிகை போட்டியை காண மைதானத்துக்கு வந்திருந்தார். கையில் ஒரு பேனர் ஒன்றையும் வைத்திருந்தார். அதில் அவர் எழுதி வைத்திருந்த வாசகங்கள் தான் டாப்கிளாஸ்.

பேனர் வாசகங்கள்

பேனர் வாசகங்கள்

மைதானத்தில் இருந்த அனைவரின் பார்வையே அந்த பேனர் மீது தான் பதிந்திருந்தது. அதில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் தான் இந்த பரபரப்புக்கு முக்கிய காரணம். அதில் இடம் பெற்றிருந்த வாசகங்கள் இவை தான்.

மகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்

மகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்

என்னை உங்களுடைய பெரிய மகளாக ஏற்றுக்கொள்வீர்களா தோனி ? நான் ஸிவாவை தங்கையாக ஏற்றுக்கொள்கிறேன் என்று அந்த பேனரில் எழுதி வைத்திருந்தார்.

வைரல் புகைப்படம்

வைரல் புகைப்படம்

போட்டியை காண மைதானம் வந்திருந்த அந்த ரசிகையின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனி ரசிகையான அவர் மைதானத்தில் இந்த பேனரை வைத்தே போட்டியை ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 15, 2019, 13:31 [IST]
Other articles published on Apr 15, 2019
English summary
Girl Fan Cute message to Dhoni In Live Match against Kolkata in ipl season.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X