For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட்டை விட்டு விலக முடிவு.. பாதி தொடரில் அதிர்ச்சி அளித்த அதிரடி வீரர்.. அதிர வைக்கும் காரணம்!

Recommended Video

Maxwell takes break from cricket | மன ஆரோக்கிய பிரச்னை : மேக்ஸ்வெல் தற்காலிக ஓய்வு!

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் கிரிக்கெட்டை விட்டு சில காலத்துக்கு விலகப் போவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மனநல பாதிப்பால் தான் மேக்ஸ்வெல் விலகி இருக்கிறார் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

மேக்ஸ்வெல் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக ஆடி வந்த நிலையில், அவர் மனநலம் சரியாக இல்லை எனக் கூறி விலகி இருக்கிறார்.

அந்த போலீஸ்காரர் சிரிப்பை பாருங்கய்யா.. ஒரு கூட்டத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்திய அந்த போலீஸ்காரர் சிரிப்பை பாருங்கய்யா.. ஒரு கூட்டத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்திய "தலைவன்"கங்குலி!

அதிரடி வீரர்

அதிரடி வீரர்

கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான அதிரடி வீரர். ஆல் - ரவுண்டரான அவர், இடையே சில காலம் அணியில் தேர்வு செய்யப்படாமல் இருந்தாலும், சமீப காலமாக அணியில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

தற்போது நடந்து வரும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மேக்ஸ்வெல். முதல் டி20 போட்டியில் 28 பந்துகளில் 62 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு சிறப்பாக பங்களித்தார்.

தொடரில் வெற்றி

தொடரில் வெற்றி

இரண்டாவது டி20 போட்டியில் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்ய வாய்ப்பு வரவில்லை, ஸ்டீவ் ஸ்மித் - வார்னர் ஜோடி தாமே போட்டியை கையில் எடுத்துக் கொண்டு இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. டி20 தொடரையும் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

விலகல் அறிவிப்பு

விலகல் அறிவிப்பு

ஆஸ்திரேலிய அணியில் எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த நேரத்தில், யாருமே எதிர்பாராத அந்த அறிவிப்பு வெளியானது. கிளென் மேக்ஸ்வெல் மனநலத்தில் சில கடினமான சூழ்நிலையில் இருப்பதால் கிரிக்கெட்டை விட்டு சில காலத்திற்கு விலகி இருப்பார் என அறிவித்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு.

முழு ஆதரவு

முழு ஆதரவு

ஆஸ்திரேலிய அணியின் மனநல ஆலோசகர் மைக்கேல் லாயிட் உடன் கலந்து பேசியே இந்த முடிவை எடுத்துள்ளார் கிளென் மேக்ஸ்வெல் என கூறப்படுகிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல் முடிவுக்கு தன் முழு ஆதரவை அளித்துள்ளது.

பாதி தொடரில்..

பாதி தொடரில்..

இலங்கை தொடர் முடிந்த உடன் இந்த அறிவிப்பை வெளியிடாமல், ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றிய உடன் இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

மாற்று வீரர் யார்?

மாற்று வீரர் யார்?

மீதமுள்ள ஒரு டி20 போட்டிக்கு மாற்று வீரராக டி ஆர்சி ஷார்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். மேக்ஸ்வெல் இத்துடன் மீண்டும் எப்போது கிரிக்கெட் ஆட வருவார் என்பது குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

பயிற்சியாளர் விளக்கம்

பயிற்சியாளர் விளக்கம்

ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மேக்ஸ்வெல் விலகல் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், கடந்த ஒரு வருடமாகவே மேக்ஸ்வெல் இயல்பாக இல்லை என எனக்குத் தோன்றியது.

முகமூடி

முகமூடி

இலங்கை டி20 தொடரின் முதல் போட்டிக்கு முன் அவர் எப்போதும் போல உற்சாகத்துடன் இல்லை என்பதை அறிந்தேன். எனினும், அவர் இரண்டு போட்டிகளிலும் கடினமாக உழைத்து ஆடினார். பொதுவெளியில் வீரர்கள் ஒரு முகமூடி அணிந்து கொள்வார்கள்.

தைரியமாக ஒப்புக் கொண்டார்

தைரியமாக ஒப்புக் கொண்டார்

பொது வாழ்க்கையில் இருந்தால், நீங்கள் முகமூடி அணிந்து தான் ஆக வேண்டும். இருந்தாலும், மேக்ஸ்வெல் அதை மீறி தைரியத்துடன் தன் குறையை ஒப்புக் கொண்டார் என்று குறிப்பிட்டார் ஜஸ்டின் லாங்கர்.

Story first published: Thursday, October 31, 2019, 14:33 [IST]
Other articles published on Oct 31, 2019
English summary
Glenn Maxwell took a break from cricket due to mental health issues. He performed well in the ongoing Sri Lankan T20 series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X