For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்பஜன் சிங் வெளியிட்ட இந்தியாவின் பிளேயிங் XI.. பாக். எதிரான போட்டி- 2 வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை?

மும்பை : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டம், வரும் சனிக்கிழமை முதல் தொடங்குகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுகிழமை இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

கடந்த முறை இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய நிலையில், இம்முறை பதிலடி தரும் முனைப்புடன் ரோகித் படை களமிறங்குகிறது.

இந்த நிலையில், இந்தியா எந்த மாதிரி பிளேயிங் லெவனை தேர்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 3 போட்டிகள் ரத்து.. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட புது பிரச்சினை.. டி20 உலகக்கோப்பைக்கு சிக்கல்ஒரே நாளில் 3 போட்டிகள் ரத்து.. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட புது பிரச்சினை.. டி20 உலகக்கோப்பைக்கு சிக்கல்

டாப் 6 பேட்ஸ்மேன்கள்

டாப் 6 பேட்ஸ்மேன்கள்

அதன் படி தொடக்க வீரர்களாக ரோகித், ராகுல் இடம்பெற வேண்டும் என்று ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார். விராட் கோலி, சூரியகுமார் யாதவ் நடுவரிசை வீரர்களாக தேர்வு செய்துள்ள ஹர்பஜன் சிங், ஃபினிஷர் ரோலில் ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக்கை ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ளார். பேட்டிங் வரிசை குறிப்பிட்ட ஹர்பஜன், இந்த வேரிசையில் எந்த குழப்பமும் இல்லை.

அஸ்வினுக்கு இடமில்லை

அஸ்வினுக்கு இடமில்லை

இந்த 6 வீரர்களும் நேரடியாக இந்திய அணியில் இடம்பிடித்துவிடுவார்கள் என்று ஹர்பஜன் சிங் குறிப்பிட்டார். சுழற்பந்துவீச்சில் தமது சாய்ஸ் அக்சர் பட்டேல் மற்றும் சாஹல் தான் என்று குறிப்பிட்ட ஹர்பஜன் சிங், அஸ்வினை தேர்வு செய்யவில்லை. இதே போன்று 3 வேகப்பந்துவீச்சாளர்களாக ஹர்பஜன் சிங், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், ஆர்ஸ்தீப் சிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஹர்சல் பட்டேலும் இல்லை

ஹர்சல் பட்டேலும் இல்லை

இது என்னுடைய விருப்பம் தான். என்னை பொறுத்தவரை ஹர்சல் பட்டேலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது. அஸ்வின் மற்றும் திபக் ஹூடாவுக்கு முதலில் சில போட்டியில் வாய்ப்பு இருக்காது என்றும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன் தேர்வு செய்த அணியில் ரிஷப் பண்ட்க்கும் இடமில்லை.

ஹர்பஜன் சிங் லெவன்

ஹர்பஜன் சிங் லெவன்

1, ரோகித் சர்மா, 2, கேஎல் ராகுல், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹர்திக் பாண்டியா, 6, தினேஷ் கார்த்திக், 7, அக்சர் பட்டேல், 8, சாஹல், 9, புவனேஸ்வர் குமார், 10, முகமது ஷமி, 11, ஆர்ஸ்தீப் சிங்

Story first published: Thursday, October 20, 2022, 10:05 [IST]
Other articles published on Oct 20, 2022
English summary
Harbhajan singh reveals his india Playing xi vs Pakistan in t20 WC
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X