For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன உடம்பு சரியில்லையா? இதோ வர்றேன்.. போட்டி துவங்கும் முன் சிறுமிக்கு உதவிய மகளிர் அணி கேப்டன்

கயானா : இந்திய மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் மகளிர் உலக டி20 தொடரில் பங்கேற்று வருகிறது.

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று, உற்சாகத்துடன் இருக்கிறது இந்திய அணி.

இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்தித்தது இந்தியா. இந்த போட்டிக்கு முன்பு மைதானத்தில் உடல் நலக் குறைவுடன் இருந்த சிறுமிக்கு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் உதவினார்.

தேசிய கீதம் முடிந்த உடன்..

தேசிய கீதம் முடிந்த உடன்..

இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும் முன் இரு நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்திய அணியின் தேசிய கீதம் முடிந்த உடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் தன் முன் நின்று இருந்த சிறுமியின் உடல் நிலை சீராக இல்லாததை கவனித்தார்.

நிர்வாகிகள் கவனமாக இருக்க வேண்டாமா?

நிர்வாகிகள் கவனமாக இருக்க வேண்டாமா?

சற்றும் யோசிக்காமல் அந்த சிறுமியை தூக்கிக் கொண்டு நடந்த அவர், போட்டி நிர்வாகி ஒருவரிடம் ஒப்படைத்தார். போட்டி நிர்வாகிகள் அந்த சிறுமி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை கூட தெரிந்து கொள்ளாமல் இருந்ததை கண்டு கோபம் வந்தாலும், ஹர்மன்ப்ரீத் சூழ்நிலை அறிந்து செய்த உதவி மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. சிறுவர், சிறுமியர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டாமா? சர்வதேச தொடர்களில் இது போல உள்ளூர் சிறுவர்களை வீரர்களுடன் மைதானத்துக்கு அனுப்புவது ஒரு சடங்கு போல நடந்து வருகிறது. இது தேவை தானா?

உலகக்கோப்பையை கைப்பற்ற வேண்டும்

உலகக்கோப்பையை கைப்பற்ற வேண்டும்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கடந்த ஒருநாள் போட்டிகள் உலகக்கோப்பை இருந்து வரை சென்று, அந்த போட்டியில் பதற்றம் காரணமாக தோல்வி அடைந்தது. அதற்கும் சேர்த்து வைத்து டி20 உலகக்கோப்பையை கைப்பற்ற இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் போவார் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.

இந்தியா வெற்றி பெறுமா?

இந்தியா வெற்றி பெறுமா?

முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா, இரண்டாம் போட்டியில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது. அடுத்து வரும் 15ஆம் தேதி அயர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. இதுவரை நடந்துள்ள ஐந்து டி20 மகளிர் உலகக்கோப்பை தொடர்களில் இந்தியா இதுவரை கோப்பை வென்றதில்லை. 2009 மற்றும் 2010இல் அரையிறுதி வரை சென்றதே அதிக பட்சமாகும்.

Story first published: Tuesday, November 13, 2018, 14:59 [IST]
Other articles published on Nov 13, 2018
English summary
Harmanpreet Kaur carried unwell mascot before the match begins
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X