For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் வாய்ப்பு தேடி நாடு நாடாக சுற்றும் ஹாங்காங் கேப்டன்.. ஒடிசா தான் பூர்வீகம்

துபாய் : ஹாங்காங் கிரிக்கெட் அணியின் கேப்டன் 20 வயதே ஆன அன்ஷுமன் ராத், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

அவர் சிறுவயது முதல் இங்கிலாந்தில் வளர்ந்தவர். இப்போது, ஹாங்காங் அணிக்காக விளையாடி வருகிறார். இங்கிலாந்தில் பொருளாதாரப் படிப்பை நிறுத்தி வைத்து இருக்கிறார்.

இந்தியா, ஒடிசா, இங்கிலாந்து, ஹாங்காங்...என்னப்பா இது? என கேட்கிறீர்களா? இதோ அவரது கிரிக்கெட் வாழ்க்கையை அவர் வார்த்தையிலேயே படியுங்கள்..

ஏன் கிரிக்கெட்?

ஏன் கிரிக்கெட்?

"நாங்கள் இந்தியாவை விட்டு வந்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது. ஒடிசாவுக்கு சென்றும் பல வருடங்கள் ஆகிவிட்டது. 2003 உலகக்கோப்பையில் இந்தியா நன்றாக ஆடியது. அதை பார்த்து நான் கிரிக்கெட் ஆடத் துவங்கினேன். நான் இந்தியன் என்பதற்கு என்னிடம் இருக்கும் ஒரே விஷயம் நான் கிரிக்கெட் ஆட விரும்புவது மட்டும்தான்"

ஹாங்காங் போனது ஏன்?

ஹாங்காங் போனது ஏன்?

"இங்கிலாந்தில் பள்ளிப் படிப்பு முடிந்து மேற்படிப்பில் சேர்ந்தேன். என் பெற்றோர் நான் கிரிக்கெட் மற்றும் படிப்பில் சேர்ந்தே முன்னேறுவதில் உறுதியாக இருந்தார்கள். எனினும், இங்கிலாந்தில் இருக்கும் விசா மற்றும் குடியேறிகள் சட்டங்கள் என்னை தொழில்முறை கிரிக்கெட் ஆட அனுமதிக்கவில்லை. எனவே, நான் படிப்பை நிறுத்தி வைத்தேன்" (இதனை அடுத்து தான் அன்ஷுமன் ஹாங்காங் சென்று கிரிக்கெட் ஆட துவங்கி உள்ளார். அங்கே பெரிய அளவில் வீரர்கள் இல்லாததால், ஹாங்காங் தேசிய அணியில் எளிதாக சேர்ந்து விட்டார்)

ஹாங்காங்கில் எப்படி இருக்கிறது?

ஹாங்காங்கில் எப்படி இருக்கிறது?

"ஹாங்காங் மற்றும் அதைப் போன்ற உறுப்பு நாடுகள் இடையே உள்ள வித்தியாசம் அதிகம். மற்ற உறுப்பு நாடுகளில் 7 அல்லது 8 வீரர்கள் முக்கிய சர்வதேச அணிகளை சந்திக்கும் ஆற்றல் பெற்று இருக்கின்றனர். ஆனால், ஹாங்காங் அணியில் வெறும் 2 வீரர்கள் தான் அப்படி இருக்கிறார்கள்"

இந்தியாவுக்கு வருவது சந்தேகம்

இந்தியாவுக்கு வருவது சந்தேகம்

"இந்தியாவில் நிறைய போட்டி உள்ளது. என் தந்தை சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஒடிசா கிரிக்கெட்டில் இருந்து அழைப்பு வருகிறது என்று. ஆனால், எந்த உத்தரவாதமும் இன்றி நான் அங்கே செல்ல மாட்டேன்"

அடுத்து நியூசிலாந்து?

அடுத்து நியூசிலாந்து?

"நியூசிலாந்து நாட்டின் சட்டங்கள் நான் படிக்கவும், கிரிக்கெட் விளையாடவும் உதவும்" என ஹாங்காங்கில் இருந்து அடுத்த வாய்ப்பு தேடி நியூசிலாந்து செல்ல உள்ளதை தெரியப்படுத்தினார் அன்ஷுமன் ராத்.

கிரிக்கெட் ஆட வாய்ப்பு தேடி அகதி போல நாடு நாடாக சுற்றிக் கொண்டு இருக்கிறார் இந்த இளம் வீரர். அவரது முயற்சிகளுக்கு நம் வாழ்த்துக்கள்.

Story first published: Tuesday, September 18, 2018, 16:24 [IST]
Other articles published on Sep 18, 2018
English summary
Hongkong captain anshuman rath origin is Odisha. He moved from UK to take Cricket as profession
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X