நான் சைவத்துக்கு மாறினேன்... அதனால எங்க டீம் ஜெயிச்சது.. என்னடா இது புதுக்கதை

IPL 2019 Delhi vs Rajasthan | அதிரடி ஆட்டத்துக்கு காரணம் என்ன?.. தவான் கருத்து- வீடியோ

ஜெய்பூர்:முழுக்க, முழுக்க சைவமாக மாறியதால் தான் மிக சிறப்பாக ஆட முடிகிறது என்று டெல்லி அணியின் துவக்க வீரர் தவான் கூறியிருக்கிறார்.

ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற 40வது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் தொடக்க வீரர் ரகானே சதம் அடித்து அசத்தினார்.

1
45916

அவருக்கு துணை நின்ற ஸ்மித் 50 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தானை வீழ்த்த தாதா கங்குலி சொன்ன டிரிக்... ரகசியத்தை சொன்ன அந்த இளம் கேப்டன்

தவான் 54 ரன்கள்

தவான் 54 ரன்கள்

தொடர்ந்து ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான ப்ருத்வி ஷா, ஷிகர் தவான் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஷா 42 ரன்களும், தவான் 54 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

78 ரன்கள்

78 ரன்கள்

19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து டெல்லி வெற்றி பெற்றது. எதிரணி பந்துகளை சிதறடித்த ரிஷப் பன்ட் 78 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சைவத்துக்கு மாறினேன்

சைவத்துக்கு மாறினேன்

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 14 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. போட்டி முடிந்து பேசிய டெல்லி அணியின் துவக்க வீரர் தவான் கூறியதாவது : நான் இப்போது வெஜிடேரியனாக மாறிவிட்டேன்.

மாறியது மனநிலை

மாறியது மனநிலை

சைவ வகை காய்கறிகளை உண்பதால் மனநிலை மாறி போட்டிகளில் மெதுவாக ஆடாமல் அதிரடியாக ஆடுகிறேன். சில போட்டிகளில் என் மனநிலையை மாற்றி ஆடுவதால் சிறப்பாக விளையாட முடிகிறது.

நல்ல துவக்கம்

நல்ல துவக்கம்

அணிக்கும் நல்ல துவக்கம் கிடைக்கிறது. குறிப்பாக பெங்களூரு போட்டியில் இருந்து எனது ஆட்டத்தை மாற்றினேன். முதலில் விக்கெட்டுகளை கணித்து பொறுமையாக துவங்கி ஆடுவேன்.

ஆக்ரோஷ விளையாட்டு

ஆக்ரோஷ விளையாட்டு

ஆனால், தற்போது இறங்கியதும் ஆக்ரோஷமாக விளையாட ஆரம்பித்து இருக்கிறேன். அதனால் முதல் ஓவரில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது என்று கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
I have become a vegetarian says Shikhar Dhawan after the winning against rajasthan royals.
Story first published: Tuesday, April 23, 2019, 13:31 [IST]
Other articles published on Apr 23, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more