For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா.. மூத்த வீரர்களின் அனுபவங்களே எனக்கான பாடம்.. ஜெய்ஸ்வால் பேட்டி!

கொல்கத்தா: மூத்த வீரர்களான தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, பட்லர், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோரிடம் இருந்து அதிக பாடங்களை கற்றுக் கொண்டு வருவதாக ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

என்னதான் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பொழுதுபோக்கு, கவர்ச்சி, கிரிக்கெட் புனிதத்தை சீரழிக்கிறது, வீரர்களின் காயத்தை அதிகரிக்கிறது என்று ஆயிரம் விமர்சனங்களை எழுதினாலும் அனைத்திற்கும் மேலாக இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் முக்கிய களமாக உள்ளது. மும்பை தெருக்களில் பாணிபூரி விற்ற சிறுவன், இன்று ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவன். விரைவில் இந்திய அணிக்காக களமிறங்கப் போகும் எதிர்கால நாயகன்.

I have learned from the experiences of MS Dhoni, Virat Kohli, rohit Sharma says RR Opener Yashasvi Jaiswal

அதுதான் ஐபிஎல் தொடர் இன்னும் மக்களுக்கான விளையாட்டாக உள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், நடராஜன் வெற்றிபெற்ற போது ஒட்டுமொத்த தமிழ்நாடும் எப்படி மகிழ்ச்சியடைந்ததோ, அதேபோல் ஜெய்ஸ்வாலின் வெற்றியையும் மக்கள் மனதளவில் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். நேற்றையப் போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறுகையில், சதம் பற்றி நாங்கள் பேசிக் கொள்ளவே இல்லை. எங்கள் மனதில் இருந்தது எல்லாம், நெட் ரன் ரேட்டை உயர்த்த வேண்டும் என்பதுதான்.

ஜெய்ஸ்வால் அடியை பாருப்பா தம்பி.. அதுக்கு பேரு பேட்டிங்.. ரியான் பராக்கை வெளுக்கும் ரசிகர்கள்! ஜெய்ஸ்வால் அடியை பாருப்பா தம்பி.. அதுக்கு பேரு பேட்டிங்.. ரியான் பராக்கை வெளுக்கும் ரசிகர்கள்!

பட்லர் அவரின் விக்கெட்டை எனக்காக பறிகொடுத்தது, அவர் மீதான மரியாதையை அதிகரிக்கிறது. அவரது செயலையும் மதிக்கிறேன். அந்த தவறு, நான் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது. ஐபிஎல் போன்ற தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஏனென்றால் சங்கக்காரா, பட்லர், ஜோ ரூட் உள்ளிட்டோரிடம் பேசி தங்களது ஆட்டங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும். அவர்களோடு ஒன்றாக விளையாடும் போது தனிநபர்களின் ஆட்டமும் மேம்படும். தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, பட்லர், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோரின் அனுபவம் வாய்ந்த வீரர்களிடம் இருந்து அதிக பாடங்களை கற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

Story first published: Friday, May 12, 2023, 8:25 [IST]
Other articles published on May 12, 2023
English summary
IPL 2023: RR Young Opener Yashasvi Jaiswal said, I try to learn from experienced players like Dhoni sir, Virat Bhaiya, Rohit Bhaiya, Jos Bhai, Sanju Bhai.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X