ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் அதிரடி மாற்றம் - இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

துபாய்: டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது தான் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்

2 ஆண்டுகள் நடைபெறும் போட்டிகளின் முடிவை வைத்து புள்ளிகள் வழங்கப்படும் . இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டியில் பங்குபெறும்

தற்போது டாகாவில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதின. தற்போது அந்த தொடரில் எற்பட்ட முடிவு அதிரடி மாற்றங்களை புள்ளி பட்டியலில் ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி எளிதில் வெற்றி பெற, இரண்டாவது டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட்டது. எனினும் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுக்க, வங்கதேச அணி 87 ரன்களில் சுருண்டது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி பாலோ ஆன் தர மீண்டும் வங்கதேச அணி களமிறங்கி இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது.

பாகிஸ்தான் அணி 2க்கு0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளை 2க்கு0 என்ற கணக்கில் பந்தாடிய இலங்கை அணி தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 1க்கு0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி 3வது இடத்தில் உள்ளது.

புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்! புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்!

BCCI announces India squad for South Africa Test series | Oneindia Tamil

இங்கிலாந்து அணி 4வது இடத்திலும் , மேற்கிந்தியத் திவுகள் அணி 5வது இடத்திலும் உள்ளது. நடப்பு டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து அணி 6வது இடத்திலும் , வங்கதேச அணி புள்ளிகள் ஏதும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது. ஆஷஸ் தொடர் மற்றும் இந்தியா, தென்னாப்பிரிக்கா தொடருக்கு பிறகு இந்த பட்டியல் மீண்டும் தலைக்கீழ் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Pakistab beat Bangladesh 2-0 in test Series. Asa result, Pakistan in 2nd Position at ICC Test championship. India at 3rd Position.
Story first published: Wednesday, December 8, 2021, 20:37 [IST]
Other articles published on Dec 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X