For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆட்டத்தில் நிகழ்ந்த அதிசயம்.. 7 வருடத்திற்கு பின் இந்திய அணியின் முக்கிய பிரச்சனை தீர்ந்தது.. செம!

சரியாக 7 வருடங்களுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பிரச்சனை தீர்ந்து இருக்கிறது.

Recommended Video

WORLD CUP 2019 IND VS BAN | வங்கதேசத்துக்கு 315 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது இந்தியா

லண்டன்: சரியாக 7 வருடங்களுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பிரச்சனை தீர்ந்து உள்ளது. இதனால் இந்தியா அணியின் தேர்வு வாரியம் கண்டிப்பாக சந்தோசத்தில் இருக்கும்.

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மிகவும் அதிரடியாக நடந்து வருகிறது. இந்தியா வங்கதேசம் அணிக்கு அதிரடியாக 314 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது.

இந்திய அணியில் ரோஹித் சர்மா 104, கே எல் ராகுல் 77 ரன்களை எடுத்து அதிரடி காட்டி இருக்கிறார்கள். தொடக்க வீரர்கள் அதிரடியாக ஆடியது மட்டுமில்லாமல் மிடில் ஆர்டரும் இன்று நன்றாகவே ஆடியது.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

2011 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர் யுவராஜ் சிங்தான். ஆனால் 2012ல் அவர் பார்ம் அவுட் ஆன பின் மிடில் ஆர்டர் விளையாட சரியான ஆள் கிடைக்கவில்லை. ஆம் அதன்பின் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் விளையாட எந்த ஒரு வீரரும் சரியான தேர்வாக இருக்கவில்லை.

பல வீரர்கள்

பல வீரர்கள்

இந்திய அணியில் நான்காவது வீரராக கே எல் ராகுல், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், மனிஷ் பாண்டே, விஜய் சங்கர் உள்ளிட்ட பலர் வீரர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். இவர்களை வைத்து இந்திய அணி பலமுறை சோதனை செய்தது. ஆனால் ஒருமுறை கூட இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் சரியாக ஆடவில்லை.

இத்தனை வருடம்

இத்தனை வருடம்

இந்த நிலையில் இத்தனை வருடங்களுக்கு பிறகு இந்திய அணிக்கு நல்ல மிடில் ஆர்டர் ஆட கூடிய வீரர் ஒருவர் கிடைத்துள்ளார். 4வது வீரராக இந்திய அணியில் களமிறங்கிய ரிஷப் பண்ட் கடந்த இரண்டு போட்டிகளாக இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 30+ ரன்கள் அடித்தார்.

இன்றும் சூப்பர்

இன்றும் சூப்பர்

அதேபோல் இன்றும் அவர் வங்கதேசம் அணிக்கு எதிராக நன்றாக ஆடினார். 41 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார். இதில் 6 பவுண்டரி, 1 சிக்ஸர் அடக்கம். இவர் அரைசதம் அடிக்கவில்லை என்றாலும் கூட இந்திய அணியின் ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டார்.

நல்லது

நல்லது

முக்கியமாக பெரிய அளவில் டென்ஷன் ஆகாமல் கூலாக இவர் ஆடினார். கே எல் ராகுல், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், மனிஷ் பாண்டே, விஜய் சங்கர் ஆகியோரை விட இவர் நன்றாகவே ஆடினார். இதேபோல் இவர் விளையாடினால் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிப்பார் என்கிறார்கள். இதனால் இந்தியா அணியின் தேர்வு வாரியம் கண்டிப்பாக சந்தோசத்தில் இருக்கும் என்றும் கூறலாம்.

Story first published: Tuesday, July 2, 2019, 18:48 [IST]
Other articles published on Jul 2, 2019
English summary
ICC World Cup 2019: India can get relief after all these years of the hunt for good middle order batsman.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X