கருப்பு நிற பேட்ச்.. வாடிய முகம்.. களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பாக். வீரர்கள்.. உருக்கமான காரணம்!

லண்டன்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் கருப்பு நிற பேட்ச் அணிந்து விளையாடி வருவது ஏன் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹமது உருக்கமான விளக்கம் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியா பாகிஸ்தான் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்து இருக்கிறது.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியா அதிரடியாக ஆடி வருகிறது. பாகிஸ்தான் பவுலர்கள் விக்கெட்டுகளை எடுத்தாலும், தொடர்ந்து அதிக அளவில் ரன்களை அளித்து வருகிறார்கள்.

விஜய் ஷங்கருக்கு அடித்தது அதிர்ஷ்டம்.. அணியில் இடம் உறுதி.. வெளியானது வீடியோ!

மிக மோசம்

மிக மோசம்

இந்த போட்டியின் தொடக்கத்தில் களத்திற்கு உள்ளே வந்ததும் பாகிஸ்தான் வீரர்கள் கருப்பு நிற பேட்ச் அணிந்தார்கள். எல்லா வீரர்களும் தங்கள் கையில் இந்த பேட்ச் அணிந்து இருந்தார்கள். ஆனால் இதற்கான காரணம் முதலில் தெரியவில்லை. அதன்பின் டாஸ் போட்ட போது பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹமது இது தொடர்பாக உருக்கமான விளக்கம் அளித்துள்ளார்.

என்ன பேட்டி

என்ன பேட்டி

அவர் அளித்த பேட்டியில், நாங்கள் பாகிஸ்தான் நடுவர் ரியாசுதீன் மறைவை அடுத்து இந்த கருப்பு பேட்சை கட்டி இருக்கிறோம். பாகிஸ்தானில் பலருக்கும் பிடித்தமான நடுவர் அவர். உலகின் முக்கியமான நடுவர்களில் ஒருவராக அவர் மதிக்கப்பட்டார். அவரின் மறைவு எங்களுக்கு வருத்தமான ஒன்று. அதனால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இதை அணிந்து இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

யார் இவர்

யார் இவர்

ரியாசுதீன் 30க்கும் அதிகமான ஒருநாள் போட்டிகளில் நடுவாராக இருந்துள்ளார். இவர் 12 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக இருந்திருக்கிறார். அதேபோல் ஐசிசியின் உயர்ந்த நடுவர்கள் குழுவிலும் ஒருவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு கிரிக்கெட் உலகில் நிறைய நண்பர்கள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லோரும் அஞ்சலி

எல்லோரும் அஞ்சலி

ரியாசுதீன் மாரடைப்பு மூலம் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வயது 60 ஆகிறது. கிரிக்கெட்டு உலகில் பலர் இவருக்கு இன்று இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். போட்டி தொடங்கும் முன் கிரிக்கெட் உலகில் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ICC World Cup 2019: Why Pakistan players are wearing black batch in today match against Australia?
Story first published: Wednesday, June 12, 2019, 18:46 [IST]
Other articles published on Jun 12, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X