For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

லண்டனில் ஆஸி.யை தூசியாக்க…. இந்த டான் மட்டும் மனசு வச்சா போதும்…!! கை காட்டும் ரசிர்கள்

லண்டன்: ஆஸி.க்கு எதிரான முக்கிய போட்டியில் டான் ரோகித் சர்மாவின் பேட்டிங் முக்கிய பங்கு வகிக்கும். அவர் நிலைத்து நின்றால் இந்தியாவுக்கு வெற்றி தான் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டியில் இன்று இந்திய அணி, வலிமையான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணியை பொறுத்த வரையில் முதல் போட்டியில் தென ஆப்ரிக்காவை காலி செய்த உற்சாகத்தில் கன ஜோராக களமிறங்குகிறது. கடந்த போட்டியில் சதம் விளாசிய ரோகித் இந்த முறையும் மட்டையை சுழற்றி கலக்கலாம்.

மிடில் ஆர்டரில் கோலி சொதப்புவதில் இருந்து மீண்டு வர வேண்டும். ராகுல், தல தோனி நிலைத்து நின்று விளையாட முயற்சிக்க வேண்டும். பவுலிங்கில் அனல் பறக்கும் பும்ரா பந்தை தொடுவதற்கு கூட பேட்ஸ்மேன்கள் தயங்குகின்றனர். அவரின் அசத்தலுடன் புவனேஸ்வர் கைகொடுக்க காத்திருக்கிறார். சுழலில் வழக்கம் போல சகால், குல்தீப் மிரட்ட உள்ளனர்.

மிரட்டல் பந்துவீச்சு

மிரட்டல் பந்துவீச்சு

ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரை அந்த அணியின் பேட்டிங் வரிசை அசுர பலமாக உள்ளது. பின்ச், வார்னர் கூட்டணி அதிரடி துவக்கம் அளிக்கலாம். கவாஜா, ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், ஸ்மித் முதல் கூல்டர் நைல் வரை பேட்டிங் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறது. இவர்களை விரைவாக வெளியேற்ற இந்திய பவுலர்கள் முயற்சிக்க வேண்டும். பவுலிங்கை பொறுத்த வரையில் ஸ்டார்க், கம்மின்ஸ், கூல்டர் நைல் கூட்டணி மீண்டும் மிரட்டலாம்.

வரலாறு சொல்வது என்ன?

வரலாறு சொல்வது என்ன?

சர்வதேச ஒருநாள் அரங்கில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 136 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளது. இதில் இந்திய அணி 49 முறையும், ஆஸ்திரேலியா அணி 77 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.

ஓவலில் கடைசி போட்டி

ஓவலில் கடைசி போட்டி

உலக கோப்பை வரலாற்றில் ஓவல் மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் 1999ல் கடைசியாக மோதியது. இதில் ஆஸ்திரேலிய அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த போட்டியை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. ஏன் என்றால் அந்த போட்டியில் சச்சின் டக் அவுட். தொடக்க வீரர்கள் சொதப்ப. மானம் காத்தார் ஜடேஜா. 100 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வெற்றி, தோல்விகள்

வெற்றி, தோல்விகள்

அதற்கு பதிலடியாக, 2011ம் ஆண்டு உலக கோப்பையில், காலிறுதியில் ஆஸ்திரேலியாவை இந்தியாவை காலி செய்து... சாம்பியன் பட்டத்தையும் தட்டி தூக்கியது. உலக கோப்பை அரங்கில் இரு அணிகளும் 11 போட்டியில் மோதின. அதில் இந்தியா 3ல் வெற்றி பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியா 8ல் வென்றுள்ளது. 1999ம் ஆண்டு தோல்விக்கு இந்திய அணி இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Story first published: Sunday, June 9, 2019, 13:21 [IST]
Other articles published on Jun 9, 2019
English summary
If rohit played well, india will beat australia, says cricket fans.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X