For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வினால் ஆஸி.க்கு காத்திருக்கும் ஆபத்து.. சமாளிக்க தீவிர பயிற்சி.. ஆஸி. வீரர் ரென்ஷா நம்பிக்கை

மும்பை : இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஒன்பதாம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. தமிழக வீரர் அஸ்வினால் ஆஸ்திரேலியா அணிக்கு ஆபத்திருப்பதாக அந்த அணியின் மேட் ரின்ஷா தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே 200 இடது கை பேட்ஸ்மேன் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்று பெருமையை அஸ்வின் படைத்திருக்கிறார்.

தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலியா அணியில் ஆறு இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.

நியூசியை ஓயிட்வாஷ் செய்த இந்தியா.. 3வது ஒருநாள் போட்டியில் அபாரம்.. ஐசிசி நம்பர் 1 அணியானது இந்தியாநியூசியை ஓயிட்வாஷ் செய்த இந்தியா.. 3வது ஒருநாள் போட்டியில் அபாரம்.. ஐசிசி நம்பர் 1 அணியானது இந்தியா

கடினமாக இருக்கும்

கடினமாக இருக்கும்

இதனால் அஸ்வினின் பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய ஆஸ்திரேலியா அணியின் மேட் ரின்ஷா அஸ்வினை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிவித்தார். அஸ்வின் ஒரு புத்திசாலித்தனமான பந்துவீச்சாளர் அவர் நிறைய விதமான பந்துகளை வீசி நம்மை நெருக்கடிக்கு ஆளாக்குவார். பந்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என அவருக்கு நன்றாக தெரியும்.

ஆபத்து இருக்கிறது

ஆபத்து இருக்கிறது

ஆனால் அஸ்வின் ஓவரை கொஞ்சம் தாக்கு பிடித்தால் அதன் பிறகு அவருடன் விளையாடுவது சுலபமாக இருக்கும். இந்தியாவில் அஸ்வினை எதிர் கொள்வதே மிகப்பெரிய சவாலாக இருக்கும். பொதுவாக ஆப் ஸிபின்னர்கள் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசும் போது அதிக முறை எல் பி டபிள்யூ ஆக வாய்ப்பு இருக்கிறது. பந்து திரும்பும் என நினைத்து இடது கை பேட்ஸ்மேன் விளையாடும்போது அது நேராக வந்து காலில் பட்டு எல் பி டபிள்யூ ஆகி விட அதிக வாய்ப்பு இருக்கிறது.

தயாராகி வருகிறோம்

தயாராகி வருகிறோம்

எனவே அதனை எப்படி தடுப்பது என்று எதிர்பார்த்து விளையாட வேண்டும். நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடு வரிசையில் விளையாடி வருவதால் சுழல் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக் கொண்டேன். இம்முறை நாங்கள் பலமான அணியை கொண்டு களமிறங்குகிறோம். எனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. கிடைத்தால் நான் தயாராக இருப்பேன். தற்போது நாங்கள் பிக் பேஸ் லீக் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். இருப்பினும் எங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்தியா தொடருக்கு தயாராக சிவப்பு பந்துகளை வைத்து விளையாடி வருகிறோம்.

பலமான அணி

பலமான அணி

இந்தியாவில் இருக்கும் கள சூழல் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். எனவே அது போல் ஒரு ஆடு களத்தை தயார் செய்து இங்கு நாங்கள் விளையாட முயற்சி செய்து வருகிறோம். பிக் பேஷ் லீக்கில் எனது அணி நாக் அவுட் ஆகியிருந்தால் இந்திய தொடருக்காக தயாராக நிறைய நேரம் கிடைத்திருக்கும். ஆனால் நாங்கள் இறுதிப் போட்டிக்கு சென்று விட்டோம்.தற்போது ஒரு வாரம் ஓய்வுக்கு பிறகு இந்தியாவில் வந்து தங்கி அங்கு முதல் டெஸ்ட் போட்டிக்காக தயாராக கொஞ்சம் நேரம் கிடைக்கும் என நம்புகிறோம் என்று மேட் ரீன்ஷா கூறினார்.

Story first published: Wednesday, January 25, 2023, 13:44 [IST]
Other articles published on Jan 25, 2023
English summary
In form batsman Matt Renshaw feels R Ashwin is biggest threat for Australia அஸ்வினால் ஆஸி.க்கு காத்திருக்கும் ஆபத்து.. சமாளிக்க தீவிர பயிற்சி.. ஆஸி. வீரர் ரென்ஷா நம்பிக்கை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X