For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிக்கலில் கிரிக்கெட் ஆஸி.. திருப்பி அடித்த பிசிசிஐ.. புகார் அளித்த சிராஜ்.. பரபர திருப்பம்!

சிட்னி : ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது.

சிராஜ் முகத்தை பாருங்க.. என்ன நடக்குது? கோபத்தில் கத்திய ரவி சாஸ்திரி..அடுத்து நடந்த பகீர் சம்பவம்! சிராஜ் முகத்தை பாருங்க.. என்ன நடக்குது? கோபத்தில் கத்திய ரவி சாஸ்திரி..அடுத்து நடந்த பகீர் சம்பவம்!

இங்கிலாந்து அணியுடனான ஆஷஸ் தொடராக இருந்தாலும், தென்னாப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட சம பலம் கொண்ட அணிகளாக இருந்தாலும் ஆஸ்திரேலிய அணி சீண்டலில் ஈடுபடும்.

சீண்டல்

சீண்டல்

இந்த முறை, இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடையும் வரை அமைதி காத்த ஆஸ்திரேலிய அணி, அதன் பின் இந்திய வீரர்களை சிக்கலில் ஆழ்த்தும் வேலைகளை செய்தது. பயோ பபுள் விதிகளை இந்திய வீரர்கள் பின்பற்றவில்லை என ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

மேலும், நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள பிரிஸ்பேனில் இந்திய வீரர்கள் தாங்கள் தங்கி இருக்கும் ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்திய அணி அதிருப்தியில் இருந்தது.

அவதூறு

அவதூறு

இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற மைதானத்தில் இந்திய வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் பும்ராவை சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் இன ரீதியாக அவதூறாக பேசி உள்ளனர். அதை பெரிதாக்கி உள்ள இந்திய அணி தொடர்ந்து இரண்டு நாட்களாக அதுபற்றி புகார் அளித்து வருகிறது.

புகார்

புகார்

மூன்றாம் நாள் முடிவில் மேட்ச் ரெப்ரீயிடம் புகார் அளித்த நிலையில், நான்காவது நாள் சில ரசிகர்களை காவல்துறை வெளியேற்றும் வரை இந்த விவகாரம் சென்றுள்ளது. இதில் ஐசிசியும் தலையிட்டுள்ளது. இது கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்புக்கு சிக்கலை உண்டாக்கி உள்ளது.

ஐசிசி விசாரணை

ஐசிசி விசாரணை

ஐசிசி இந்த விவகாரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேவையான நடவடிக்கைகளை எடுத்ததா? என விசாரிக்கும் என்பதால் நிலைமை மோசமாகி உள்ளது. ஆஸ்திரேலிய அணி சீண்டியதாலேயே, இந்த விஷயத்தை இந்திய அணி பெரிதாக்கி இருக்கலாம் என கருதப்படுகிறது.

Story first published: Sunday, January 10, 2021, 11:59 [IST]
Other articles published on Jan 10, 2021
English summary
IND vs AUS : BCCI brought trouble to Cricket Australia, after Mohammed Siraj complained about racial abuse.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X