For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வரலாற்றில் இடம் பிடித்த முதல் டி20.. இந்தியாவுக்கு கிடைத்த அரிய பெருமை.. கொண்டாடும் ரசிகர்கள்!

Recommended Video

முதல் டி20 போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த அரிய பெருமை

டெல்லி : இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டி20 போட்டி கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

ஆம், இந்தப் போட்டி ஆயிரமாவது சர்வதேச டி20 போட்டி ஆகும். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய டி20 போட்டிகள் ஆயிரம் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறது.

அந்த ஆயிரமாவது மைல்கல் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் இடம் பெற்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளன.

முதல் டி20 நடக்கும்.. ஆனா நடக்காது.. காத்திருக்கும் அவமானம்.. தப்புக் கணக்கு போட்டு ஏமாந்த கங்குலி!முதல் டி20 நடக்கும்.. ஆனா நடக்காது.. காத்திருக்கும் அவமானம்.. தப்புக் கணக்கு போட்டு ஏமாந்த கங்குலி!

ஒருநாள் போட்டிகள்

ஒருநாள் போட்டிகள்

டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே ஒரே கிரிக்கெட் வடிவமாக இருந்து வந்த நிலையில், அதன் சுருக்கப்பட்ட வடிவமாக வந்தது ஒரு இன்னிங்க்ஸுக்கு 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டி.

டி20 அறிமுகம்

டி20 அறிமுகம்

ஒருநாள் போட்டிகள் ஒரு கட்டத்தில் அதன் கவர்ச்சித் தன்மையை இழந்தது. பல ஒருநாள் போட்டிகளை காண ரசிகர்கள் குறைவாக வரத் துவங்கினர். அந்த காலகட்டத்தில் தான் டி20 என்றும் 20 ஓவர்கள் போட்டி அறிமுகம் ஆனது.

பெரும் எதிர்ப்பு

பெரும் எதிர்ப்பு

டி20 போட்டிக்கு பெரும் எதிர்ப்பு முதலில் இருந்தது. பலரும் இந்த கிரிக்கெட் வடிவம் டெஸ்ட் கிரிக்கெட்டை சிதைத்து விடும். வீரர்கள் மத்தியில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். அது டெஸ்ட் கிரிக்கெட்டை யாரும் விரும்பாத வகையில் மாற்றி விடும் என்றார்கள்.

வளர்ச்சி

வளர்ச்சி

ஆனால், அதை தாண்டி டெஸ்ட் கிரிக்கெட்டை பெரிய அளவில் பாதிக்காத வகையில் டி20 போட்டிகள் பெரிய அளவில் வளர்ச்சி கண்டது. ஐபிஎல், பிக் பாஷ் லீக் போன்ற உள்ளூர் டி20 தொடர்களும் இந்த கிரிக்கெட் வடிவத்தை ரசிகர்கள் கொண்டாடும் கிரிக்கெட் வடிவமாக மாற்றியது.

500வது டி20 போட்டி

500வது டி20 போட்டி

முதல் டி20 போட்டி 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்றது. அதன் பின் 11 ஆண்டுகள் 364 கழித்து 500வது டி20 போட்டி நடைபெற்றது.

அதிரடி நடவடிக்கை

அதிரடி நடவடிக்கை

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சுமார் 70 நாடுகளுக்கு சர்வதேச டி20 போட்டி அந்தஸ்து அளித்து அதிரடி நடவடிக்கை எடுத்தது ஐசிசி. அதையடுத்து அடுத்த 500 சர்வதேச டி20 போட்டிகள் 3 ஆண்டுகள் 259 நாட்களில் நடந்துள்ளது.

மைல்கல் போட்டிகள்

மைல்கல் போட்டிகள்

ஆயிரமாவது டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையே 1984இல் நடைபெற்றது. அதே போல, ஆயிரமாவது ஒருநாள் போட்டி இங்கிலாந்து - வெ.இண்டீஸ் அணிகள் இடையே 1995ஆம் ஆண்டு நடைபெற்றது.

முதல் முறை வாய்ப்பு

இந்த நிலையில், ஆயிரமாவது டி20 போட்டி இந்தியா - வங்கதேசம் இடையே டெல்லியில் 2019ஆம் ஆண்டு நடைபெறுகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் ஆயிரமாவது மைல்கல் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெறாத இந்தியா - வங்கதேசம் அணிகள் இந்த வாய்ப்பை பெற்றுள்ளன. ரசிகர்கள் இந்த மைல்கல் போட்டியை இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

இந்தியாவுக்கு பெருமை

இந்தியாவுக்கு பெருமை

மேலும், இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறுவது இந்தியாவுக்கு பெருமை அளிக்கும் விஷயமாக மாறி உள்ளது. முன்னதாக, இந்தப் போட்டி கடும் காற்று மாசு காரணமாக நடைபெறுமா? என்ற சிக்கல் இருந்தது. எனினும், போட்டி திட்டமிட்டபடி சரியாக துவங்கி நடைபெற்றது.

Story first published: Sunday, November 3, 2019, 19:53 [IST]
Other articles published on Nov 3, 2019
English summary
IND vs BAN first T20 becomes 1000th T20I in cricket history. Fans shares their love for this format.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X