திணறும் வீரர்கள்.. ஒன்னும் சரியில்லை.. சக்தி வாய்ந்த கோவிலில் பூஜையை போட்ட கோச்.. வெளியான வீடியோ!

Ravi Shastri offers special prayer | சக்தி வாய்ந்த கோவிலில் பூஜையை போட்ட ரவி சாஸ்திரி

உஜ்ஜைன் : வங்கதே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, புகழ்பெற்ற உஜ்ஜைன் மகா காலேஸ்வர் கோவிலில் பூஜை செய்த வீடியோ வெளியாகி உள்ளது.

இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் - இரவு போட்டியாக நடக்க உள்ளது.

திணறல்

திணறல்

இந்தப் போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட உள்ளது. இது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக பார்க்கப்பட்டாலும், இந்திய பேட்ஸ்மேன்கள் பயிற்சியில் இந்த பிங்க் நிற பந்தை எதிர்கொள்ள திணறி வருகின்றனர். அதனால், ரவி சாஸ்திரி வேண்டுதல் நடத்தி இருக்கலாம் என கருதப்படுகிறது.

முதல் டெஸ்ட் வெற்றி

முதல் டெஸ்ட் வெற்றி

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.

பகல் - இரவு டெஸ்ட்

பகல் - இரவு டெஸ்ட்

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 22 அன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி வங்கதேச தொடர் துவங்க சில நாட்கள் இருக்கும் போது தான் முடிவானது.

பயிற்சி இல்லை

பயிற்சி இல்லை

அதனால், இரு அணி வீரர்களும் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்படும் பிங்க் நிற பந்துக்கு ஏற்ப அதிக பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. முதல் டெஸ்டுக்கு தயார் ஆகும் போதே இந்திய அணி வீரர்கள் பிங்க் நிற பந்திலும் பயிற்சி செய்தனர்.

பேட்டிங் மாற்றம்

பேட்டிங் மாற்றம்

பகல் டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் சிவப்பு நிற பந்துக்கும், பிங்க் நிற பந்துக்கும் செயல்பாட்டளவில் சில வித்தியாசங்கள் இருக்கிறது. அதனால், பிங்க் நிற பந்தில் பேட்டிங் செய்யும் போது பேட்ஸ்மேன்கள் எதிர்வினை ஆற்றும் நேரத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட பயிற்சிக்குப் பின் ரஹானே மட்டுமே பேட்டிங்கில் தடுமாறாமல் பிங்க் நிற பந்தை எதிர்கொண்டதாக தகவல் கிடைத்தது. மற்ற பேட்ஸ்மேன்களுக்கு சிறிய தடுமாற்றம் உள்ளது.

ரவி சாஸ்திரி பூஜை

ரவி சாஸ்திரி பூஜை

இந்த நிலையில் தான் ரவி சாஸ்திரி புகழ்பெற்ற, உஜ்ஜைன் மகா காலேஸ்வர் சிவன் கோவிலில் பூஜையுடன் வழிபாடு செய்துள்ளார். ருத்ர சாகர் குளத்தின் கரையில் இருக்கும் இந்த புகழ்பெற்ற பழமையான கோவில் பனிரெண்டு ஜோதி லிங்கங்களில் ஒன்றாகும்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

அந்தக் கோவிலில் காவி வேட்டி அணிந்து மாலைகள் அணிந்து, கண்ணை மூடி ரவி சாஸ்திரி வேண்டுதல் செய்யும் காட்சி வீடியோவாக இணையத்தில் வெளியாகி உள்ளது. பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருணும் அவருடன் இருக்கிறார்.

வேண்டுதல் புதிதல்ல

வேண்டுதல் புதிதல்ல

ரவி சாஸ்திரி இந்திய அணி விளையாடும் நகரங்களில் இருக்கும் புகழ்பெற்ற கோவில்களில் வழிபாடு நடத்துவது புதிதல்ல. எனினும், மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சொதப்பாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த வழிபாட்டை நடத்தி இருக்கலாம்.

பந்துவீச்சில் ஆதிக்கம்

பிங்க் நிற பந்து ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக பயிற்சிக் களத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அதனால், இந்தியா பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs BAN : Head Coach Ravi Shastri offers special prayer ahead of Day - Night test match
Story first published: Monday, November 18, 2019, 11:34 [IST]
Other articles published on Nov 18, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X