தம்பி.. அவ்ளோ தான்.. வீட்டுக்கு கிளம்புங்க.. சிறப்பாக ஆடியும் ஒரே ஒரு போட்டியுடன் கழட்டி விட்ட கோலி!

ராஞ்சி : இந்திய டெஸ்ட் அணியில் திடீரென இடம் பிடித்த சுழற் பந்துவீச்சாளர் ஷாபாஸ் நதீம், ஒரே ஒரு போட்டியில் ஆடியதோடு அணியில் இருந்து வாய்ப்பை இழந்தார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் குல்தீப் யாதவ் காயமாக இருப்பதாக கூறி, திடீரென அணியில் சேர்க்கப்பட்டார் ஷாபாஸ் நதீம்.

அந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசியும், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஸ்ட்ரைக் நடக்கும் போதே டீல் பேசி முடித்த வங்கதேச கேப்டன்.. இந்திய தொடருக்கு முன் வெடித்த சர்ச்சை!

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர்

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர்

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 - 0 என தொடரை கைப்பற்றி மூன்றாவது மற்றும் கடைசி போட்டிக்கு தயாரானது.

திடீர் வாய்ப்பு

திடீர் வாய்ப்பு

அப்போது ராஞ்சி மண்ணை சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர் ஷாபாஸ் நதீமை களமிறக்கி தென்னாப்பிரிக்க அணியை திணறடிக்க திட்டமிட்டு அவரை களமிறக்கியது. ஷாபாஸ் நதீம் உள்ளூர் வீரர் என்பதால் ஆடுகளத்தின் தன்மை அறிந்து பந்து வீசுவார் என கருதப்பட்டது.

உள்ளூர் போட்டிகளில் மிரட்டல்

உள்ளூர் போட்டிகளில் மிரட்டல்

ஷாபாஸ் நதீம் முதல் தர போட்டிகளில், ரஞ்சி தொடரில் தொடர்ந்து அதிக விக்கெட்கள் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். சுமார் 15 ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் ஆடி வரும் அவருக்கு தன் 30 வயதில் தான் இந்திய அணியில் இடம் பெறும் வாய்ப்பு கிடைத்தது.

சிறப்பான பவுலிங்

சிறப்பான பவுலிங்

மூன்றாவது டெஸ்டில் வாய்ப்பு பெற்ற ஷாபாஸ் நதீம் முதல் இன்னிங்க்ஸில் 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இரண்டாம் இன்னிங்க்ஸில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசிய நதீம் அனைவரின் பாராட்டையும் பெற்றார். ரசிகர்களும் நதீமை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வந்தனர். அவருக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

வங்கதேச டெஸ்ட் தொடர்

வங்கதேச டெஸ்ட் தொடர்

எனினும், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் ஷாபாஸ் நதீம் பெயர் இடம் பெறவில்லை. ஒரே ஒரு போட்டியுடன் அவரை அணியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்துள்ளார் கேப்டன் கோலி.

யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு?

சுழற் பந்துவீச்சில் முன்னதாக இடம் பெற்ற அதே அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் மீண்டும் அணியில் இடம் பிடித்தனர். குல்தீப் யாதவ் காயம் குணமாகி விட்டதா? என்ற தகவலும் கூறப்படவில்லை.

நீக்கம் ஏன்?

நீக்கம் ஏன்?

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுவதால் வலுவான அணியையே தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கில் மீண்டும் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும், தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலும் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

குல்தீப் யாதவ்வுக்கு வாய்ப்பே அளிக்காத நிலையில், ஒரே ஒரு போட்டியில் ஆடினாலும் தன் முத்திரையை பதித்த வீரருக்கு அணியில் இடம் மறுத்துள்ளார் கோலி. ஷாபாஸ் நதீமுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைக்குமா?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs BAN : Shahbaz Nadeem dropped in Bangladesh test series despite good show in SA test.
Story first published: Saturday, October 26, 2019, 17:58 [IST]
Other articles published on Oct 26, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X