For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்ப எங்களைப் பார்த்தா எப்படி தெரியுது? கங்குலிக்கு ஜால்ரா போட்ட கோலி.. கடுப்பான முன்னாள் வீரர்!

Recommended Video

Ind vs ban 2nd test : Sunil gavaskar slams Kohli for praising Ganguly

கொல்கத்தா : கேப்டன் கோலி, கங்குலி பற்றி உயர்வாக பேசிய கருத்தை, மற்றொரு முன்னாள் வீரர் ஏற்றுக் கொள்ளவில்லை. அது பற்றி அவர் போட்டிக்கு பின் சுட்டிக் காட்டி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி தொடரை 2 - 0 என இந்தியா கைப்பற்றியது. இந்த வெற்றிக்குப் பின் கோலி பேசுகையில், முன்னாள் இந்திய கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலி பற்றி உயர்வாக பேசினார். அது தான் முன்னாள் வீரர் கவாஸ்கரை சீண்டி விட்டுள்ளது.

டெஸ்ட் தொடர் வெற்றி

டெஸ்ட் தொடர் வெற்றி

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2 - 0 என கைப்பற்றியது. அதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரையும் இந்தியா முழுமையாக வென்று இருந்தது.

சிறந்த அணி இதுதான்

சிறந்த அணி இதுதான்

கேப்டன் விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி தான் இதுவரை ஆடிய இந்திய டெஸ்ட் அணிகளிலேயே சிறந்த அணி என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. டெஸ்ட் தரவரிசையிலும் இந்தியா முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

கங்குலி காலம்

கங்குலி காலம்

90களில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. வெற்றிகளை விட தோல்விகள் மற்றும் டிரா தான் அதிகமாக இருந்தது. 2000மாவது ஆண்டுக்குப் பின் கங்குலி காலத்தில் தான் இந்திய அணி வெற்றி தோல்விகளை மாறி, மாறி சந்தித்தது. சில மறக்க முடியாத வெற்றிகளை பெற்று சர்வதேச அரங்கில் இந்திய அணிக்கு மரியாதை தேடித் தந்தார் கங்குலி.

அடுத்த முன்னேற்றம்

அடுத்த முன்னேற்றம்

அடுத்து தோனி கேப்டனாக இருந்த போது, இந்தியா அணி வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை குவிக்காவிட்டாலும், டெஸ்ட் அணி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனை செய்தது.

வெற்றிகளை குவிக்கும் கோலி

வெற்றிகளை குவிக்கும் கோலி

இதையடுத்து விராட் கோலி காலத்தில் இந்திய அணி வெளிநாடுகளிலும், இந்திய மண்ணிலும் வெற்றிகளை குவித்து வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் தன் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்து வரலாற்று சாதனை புரிந்தது. மேலும், கடைசி மூன்று டெஸ்ட் தொடர்களில் வைட்வாஷ் வெற்றி பெற்று சாதித்துள்ளது.

கோலி பேச்சு

கோலி பேச்சு

இந்த நிலையில், வங்கதேச தொடர் வெற்றிக்குப் பின் பரிசளிப்பு விழாவில் பேசிய கேப்டன் கோலி, இந்த வெற்றிப் பாதை கங்குலியின் காலத்தில் தொடங்கியதாகவும், அதைதான் தற்போதைய இந்திய அணி தொடர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறினார்.

கவாஸ்கர் விளக்கம்

கவாஸ்கர் விளக்கம்

இந்த கருத்தை விமர்சித்து முன்னாள் வீரர் கவாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். கங்குலி காலத்துக்கு முன்பும் இந்தியா வெற்றி பெற்று வந்தது என கூறி இருக்கிறார். அவர் 70, 80களில் கிரிக்கெட் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி தங்களை மறந்து விட்டு பேசியதை கண்டு கடுப்பான அவர் வெளிப்படையாக அது பற்றி விமர்சித்துள்ளார்.

பிசிசிஐ தலைவர் என்பதால்..

பிசிசிஐ தலைவர் என்பதால்..

கவாஸ்கர் கூறுகையில், "இந்திய கேப்டன் பேசும் போது இது எல்லாமே கங்குலி காலத்தில் 2000மாவது ஆண்டுகளில் தொடங்கியது என்றார். கங்குலி தான் தலைவர் என்பது தெரியும். அதனால், கோலி அவரைப் பற்றி நல்லவிதமாக பேச வேண்டும் என பேசி இருக்கலாம். ஆனால், இந்தியா 70, 80களிலேயே வெற்றி பெற்று வந்துள்ளது. அப்போது அவர் பிறக்கவில்லை" என கூறினார்.

70, 80களில் வெற்றிகள்

70, 80களில் வெற்றிகள்

நிறைய மக்கள் 2000த்தில் தான் கிரிக்கெட் துவங்கியது என நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இந்திய அணி 70களிலேயே வெளிநாடுகளில் வெற்றி பெற்றுள்ளது என்றார்.

மற்ற அணிகளை போல..

மற்ற அணிகளை போல..

1986இல் கூட இந்தியா வெளிநாட்டில் வென்றுள்ளது. வெளிநாடுகளில் தொடர்களை சமன் செய்துள்ளது. மற்ற அணிகளைப் போலவே தோற்றும் உள்ளது என்று விளக்கம் அளித்தார் கவாஸ்கர்.

Story first published: Monday, November 25, 2019, 13:06 [IST]
Other articles published on Nov 25, 2019
English summary
IND vs BAN : Sunil Gavaskar takes a dig at Virat Kohli after his post match speech about Ganguly.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X