வெறும் 3 வினாடிகள்.. கங்குலி கேட்ட அந்த கேள்வி.. ஓகே சொன்ன கோலி.. வரலாற்றை புரட்டிப் போட்ட சம்பவம்!

3 வினாடிகளில் முடிவெடுத்த கோலி... வரலாற்றை புரட்டிப் போட்ட சம்பவம்!

மும்பை : இந்திய கிரிக்கெட்டை மாற்றப் போகும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றி கங்குலி - கேப்டன் விராட் கோலி வெறும் 3 வினாடிகளில் பேசி முடிவெடுத்துள்ளனர்.

இந்தியா இதுவரை பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இல்லை. இந்திய வீரர்கள் மற்றும் பிசிசிஐ பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் ஆட சம்மதம் கூறாமல் இருந்து வந்தன.

சம்மதம் பெற்றார்

சம்மதம் பெற்றார்

இந்த நிலையில், புதிய பிசிசிஐ தலைவர் கங்குலி பகல் - இரவு டெஸ்ட் போட்டி நடத்த முடிவு செய்து, கேப்டன் கோலியிடம் அதற்கு சம்மதமும் பெற்றார். அந்த சந்திப்பின் போது என்ன நடந்தது என கங்குலி கூறி இருக்கிறார்.

பகல் - இரவு டெஸ்ட்

பகல் - இரவு டெஸ்ட்

சர்வதேச டெஸ்ட் அரங்கில் பல ஆண்டுகளாக டெஸ்ட் அந்தஸ்து பெற்று ஆடி வரும் அணிகளில் இந்தியா - வங்கதேசம் மட்டுமே இன்னும் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை.

கங்குலி தீர்வு

கங்குலி தீர்வு

இந்த நிலையில், புதிய பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற கங்குலி டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் அதிகம் வராமல் இருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்ற முடிவை எடுத்தார். அதற்கு அவர் சொன்ன தீர்வு தான் பகல் - இரவு டெஸ்ட் போட்டி.

பிம்பம்

பிம்பம்

இதுவரை இந்திய வீரர்கள் பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் ஆட ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்ற பிம்பம் இருந்தது. அதனால், கங்குலியின் திட்டம் நிறைவேறுமா என்ற சந்தேகம் இருந்தது.

முதல் சந்திப்பு

முதல் சந்திப்பு

அக்டோபர் 23 அன்று தலைவராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்ற கங்குலி, அதற்கு அடுத்த நாள் கேப்டன் விராட் கோலியை சந்தித்தார். இருவரும் சந்தித்த போது முதல் கேள்வியாக கங்குலி, பகல் - இரவு டெஸ்ட் போட்டி நடத்த வேண்டும் என கூறி அவர் கருத்தை கேட்டுள்ளார்.

மூன்று வினாடிகள்

மூன்று வினாடிகள்

அப்போது வெறும் மூன்று வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொண்ட கோலி, உடனடியாக சம்மதம் கூறி இருக்கிறார். அதையடுத்து தான் கங்குலி, சில நாட்களில் துவங்க உள்ள வங்கதேச டெஸ்ட் தொடரை மனதில் வைத்து அந்த அணியுடன் பகல் - இரவு டெஸ்ட் குறித்து பேசி இருக்கிறார்.

வங்கதேச அணி ஒப்புதல்

வங்கதேச அணி ஒப்புதல்

வங்கதேச அணியும் பகல் - இரவு டெஸ்ட் போட்டிக்கு சம்மதம் கூறி இருக்கிறது. அதனால், வரலாற்றில் முதன் முறையாக இந்தியா - வங்கதேசம் இரு அணிகளும் தங்கள் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளன.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்திய மண்ணில் நடைபெறும் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி வெற்றிகரமாக அதிக ரசிகர் கூட்டத்துக்கு இடையே நடைபெற்றால் இனி அதிக பகல் - இரவு டெஸ்ட் போட்டிகள் நடக்கும்.

முக்கிய மாற்றம்

முக்கிய மாற்றம்

இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கிய டெஸ்ட் கிரிக்கெட் மாற்றம் பிசிசிஐ தலைவர் கங்குலி - கேப்டன் விராட் கோலி இடையே மூன்று வினாடிகளில் முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs BAN : Virat Kohli took historic decision in just 3 seconds says BCCI president Sourav Ganguly.
Story first published: Sunday, November 3, 2019, 14:24 [IST]
Other articles published on Nov 3, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X