இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. ஃப்ரீயா விடுங்க.. படுதோல்விக்கு பின் இந்திய வீரர் ஷாக் பேச்சு!

IND VS NZ 3RD ODI | Chahal about whitewash defeat

மவுன்ட் மவுங்கனி : நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3 - 0 என இந்தியா படுமோசமாக இழந்துள்ள நிலையில், இந்திய வீரர் சாஹல் அனைத்து போட்டிகளிலும் வெல்ல முடியாது என பேசி உள்ளார்.

மேலும், கடந்த நான்கைந்து ஆண்டுகளில் இது நான்கு அல்லது ஐந்தாவது தொடர் தோல்வி என்றும் கூறி இருக்கிறார்.

இந்திய அணி தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் சப்பைக் கட்டு காட்டுவதாகவே தெரிகிறது. கேப்டன் கோலியும் தற்போது டி20 மற்றும் டெஸ்ட் தொடர் தான் முக்கியம். ஒருநாள் போட்டிகள் அல்ல என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

டி20 தொடர் வெற்றி

டி20 தொடர் வெற்றி

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய டி20 தொடர் முதலில் நடைபெற்றது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு திட்டமிட்டு தயாராகி வரும் இந்திய அணி அந்த தொடரில் 5 - 0 என அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, அசத்தியது. இரண்டு போட்டிகளை சூப்பர் ஓவர் வரை சென்றும் வெற்றி பெற்றது.

ஒருநாள் தொடர் தோல்வி

ஒருநாள் தொடர் தோல்வி

அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இந்த தொடரையும் இந்திய அணி கைப்பற்றும் என எதிர்பார்த்த நிலையில், இந்திய அணி மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. சுமார் 31 ஆண்டுகளுக்குப் பின் ஒருநாள் தொடரில் வைட்வாஷ் தோல்வியை பெற்றுள்ளது.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

இந்த நிலையில், இந்திய அணி மீது கடும் விமர்சனம் உள்ளது. அணித் தேர்வில் கேப்டன் கோலி சரியாக செயல்படவில்லை, பும்ரா மற்றும் கோலி இந்த தொடரில் சரியாக செயல்படவில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கு இந்திய அணி சார்பில் பதில் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், சாஹல் அதிரடி பேட்டி கொடுத்துள்ளார்.

சாஹல் பேச்சு

சாஹல் பேச்சு

மூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்த பின் நடத்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சாஹல் இது பெரிய தோல்வி இல்லை என்பது போல பேசினார். எல்லா போட்டிகளையும் வெல்ல முடியாது என்றார் அவர். ஒரு தொடரை வென்றோம், ஒரு தொடரில் தோற்றோம் என சாதராணமாக பேசினார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

"ஒட்டுமொத்தமாக பார்த்தால் இது கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் நான்காவது அல்லது ஐந்தாவது தொடர் தோல்வி ஆகும். ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் வெல்ல முடியாது. நாங்கள் ஒரு தொடரை வென்றுள்ளோம், மற்றொன்றை இழந்துவிட்டோம். எனவே இது பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டியதில்லை: என்றார் சாஹல்

கோலி சமாளிப்பு

கோலி சமாளிப்பு

கேப்டன் கோலியும் இது பெரிய விஷயம் இல்லை என்பதைப் போலவே இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்த பின் பேசினார். அவர் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில், ஒருநாள் போட்டிகள் அத்தனை முக்கியமல்ல. டி20, டெஸ்ட் போட்டிகள் தான் முக்கியம் என கூறி இருந்தார்.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

அடுத்து டி20 உலகக்கோப்பை வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இந்தியா ஆடும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இடம் பெற்று வருகிறது. அதனால், ஒருநாள் போட்டிகள் அத்தனை முக்கியமல்ல என்று கூறி இருக்கிறார் கோலி.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs NZ : Chahal plays down the whitewash defeat. He says
Story first published: Tuesday, February 11, 2020, 21:07 [IST]
Other articles published on Feb 11, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X