தோனி ஊரில் தான் கிளைமாக்ஸ்.. ஆஸி. வீரரை தரமான சம்பவம் செய்யப் போகும் கேப்டன் கோலி!

Virat Kohli Needs Two Points To Topple Steve Smith Form Top Ranking

ராஞ்சி : ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முந்தி முதல் இடத்தைப் பிடிக்கப் போகிறார் கேப்டன் விராட் கோலி.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன இரண்டாவது டெஸ்டின் முடிவை அடுத்து ஐசிசி புதிய டெஸ்ட் தரவரிசையை வெளியிட்டுள்ளது.

அதில் இந்திய வீரர்கள் பலரும் பெரிய அளவில் முன்னேறி உள்ளனர். மயங்க் அகர்வால், அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ் என பலரும் தரவரிசையில் முன்னேறி உள்ளனர்.

விராட் கோலி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அதே இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். ஆனால், அவரது புள்ளிகள் அதிகரித்து உள்ளது. தற்போது ஸ்டீவ் ஸ்மித்தை விட ஒரு புள்ளி மட்டுமே அவர் குறைவாக இருக்கிறார்.

புள்ளிகள் சரிந்தது

புள்ளிகள் சரிந்தது

முதல் டெஸ்டில் விராட் கோலி பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. அதனால், அப்போது அவரது தரவரிசை புள்ளிகள் பெரும் அளவில் சரிந்து இருந்தது. இந்த நிலையில், இரண்டாவது டெஸ்டில் விராட் கோலி இரட்டை சதம் அடித்தார்.

இரட்டை சதம் தந்த முன்னேற்றம்

இரட்டை சதம் தந்த முன்னேற்றம்

ஒரே இரட்டை சதம் அவருக்கு தரவரிசைப் புள்ளிகளை வாரிக் குவிக்க, அவர் தற்போது 936 புள்ளிகள் பெற்றுள்ளார். முதல் இடத்தில் இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் 937 புள்ளிகள் பெற்றுள்ளார்.

ஸ்மித் முதல் இடம்

ஸ்மித் முதல் இடம்

கடந்த மாதம் முடிவடைந்த ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் ஓராண்டு தடைக்குப் பின் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி, தரவரிசையில் கோலியிடம் பறிகொடுத்த தன் முதல் இடத்தை தட்டிப் பறித்தார்.

ஒரு புள்ளி மட்டுமே

ஒரு புள்ளி மட்டுமே

அதற்கு கோலி பதிலடி கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், விராட் கோலி தற்போது அவரை விட ஒரு புள்ளி மட்டுமே குறைவாக இருக்கிறார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி மீதம் உள்ளது.

தோனி ஊரில்..

தோனி ஊரில்..

தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற உள்ள அந்த டெஸ்ட் தொடரில் கோலி ஒரு அரைசதம் அடித்தால் கூட, அவரது டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை புள்ளி அதிகரித்து அவர் ஸ்டீவ் ஸ்மித்தை முந்தி முதல் இடத்தை பிடிப்பார்.

ஜடேஜா கலக்கல்

ஜடேஜா கலக்கல்

இரண்டாவது டெஸ்டில் பேட்டிங்கில் கலக்கினார் ஜடேஜா. அதிரடியாக ஆடி 91 ரன்கள் குவித்த அவர் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் வேகமாக முன்னேறி 40வது இடத்தில் இருக்கிறார். இது தான் அவரது சிறந்த டெஸ்ட் தரவரிசை பதிவு.

அஸ்வின் 7ஆம் இடம்

அஸ்வின் 7ஆம் இடம்

முதல் டெஸ்ட் முடிவில் பத்தாம் இடத்தில் இருந்த அஸ்வின், இரண்டாவது டெஸ்டில் ஆறு விக்கெட்கள் அள்ளினார். தற்போது அவர் மூன்று இடங்கள் முன்னேறி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஏழாம் இடம் பிடித்துள்ளார்.

உமேஷ் யாதவ் 6 விக்கெட்கள்

உமேஷ் யாதவ் 6 விக்கெட்கள்

உமேஷ் யாதவ்வும் 6 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் டெஸ்ட் அணிக்கு திரும்பிய அவர் ஆறு இடங்கள் முன்னேறி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 25ஆம் இடம் பிடித்துள்ளார்.

மயங்க் அகர்வால் டாப் 20

மயங்க் அகர்வால் டாப் 20

மயங்க் அகர்வால் இந்த தொடரில் தன் இரண்டாம் சதம் அடித்து இருந்தார். முதல் இருபது இடங்களுக்குள் முதன் முறையாக நுழைந்துள்ளார். தற்போது பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 17வது இடத்தில் இருக்கிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs SA : Virat Kohli will beat Steve Smith to take over no.1 in test ranking after Ranchi test. Now, Kohli have just 1 point lesser than Steve Smith in test rating.
Story first published: Monday, October 14, 2019, 18:41 [IST]
Other articles published on Oct 14, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X