For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காத்திருக்கு சவால்.. நாளை புதிய வரலாறு புரட்டப்படுகிறது.. பெங்களூரில்!

காத்திருக்கு சவால்.. நாளை புதிய வரலாறு புரட்டப்படுகிறது.. பெங்களூரில்!

பெங்களூர்: ஆப்கானிஸ்தான் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த போட்டி நாளை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

டெஸ்ட் தகுதி பெற்றுள்ள அப்கானிஸ்தான் பங்கு பெறும் முதலாவது டெஸ்ட் போட்டி என்பதே இப்போட்டியின் தனிச்சிறப்பு. இதுவரை ஐசிசி 11 நாடுகளுக்கு டெஸ்ட் போட்டி விளையாடும் அந்தஸ்த்தை அளித்துள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் பங்கேற்பதன் மூலம் ஆப்கானிஸ்தான் 12 ஆவது நாடாக டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெறுகிறது.

இந்திய அணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 1932ம் ஆண்டு எதிர் கொண்டது. அதில் இங்கிலாந்து அணியே வெற்றியும் பெற்றது.

சுவாரஸ்யமான போட்டி

சுவாரஸ்யமான போட்டி

டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடத்திலிருக்கும் அணிக்கும், முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணிக்கும் இடையேயான போட்டி என்பதால் கண்டிப்பாக சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே நம்பலாம். இந்திய அணி இதுவரை 521 டெஸ்ட் போட்டிகளில் பங்கு பெற்று அதில் 144 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.

 ரஷீத் கான் சுழல்

ரஷீத் கான் சுழல்

ஆப்கானிஸ்தான் அணியை ஒரு பொழுதும் குறைத்து மதிப்பிட முடியாது. உலகின் நம்பர் ஒன் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் இந்திய அணிக்கு கண்டிப்பாக சிம்ம சொப்பனமாக இருப்பார் என்பதில் மாற்று கருத்தே இல்லை எனலாம். தேவைப்படும் நேரங்களில் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடிய திறமையும் அவருக்கு இருப்பது ஆப்கானின் கூடுதல் பலம்.

துருப்புச் சீட்டு ரஹ்மான்

துருப்புச் சீட்டு ரஹ்மான்

மற்றுமொரு துருப்புசீட்டு முஜீப் ஊர் ரஹ்மான், மிகசிறந்த ஸ்பின்னர். ஆப்கான் அணி மொத்தம் நன்கு சுழல்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கண்டிப்பாக அவர்களுக்கு கை கொடுக்கும். இவர்களை தவிர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமத் ஹஸத், கேப்டன் அஸ்கார் ஸ்டானிக்ஸ் மற்றும் ஆல் ரவுண்டர் முகமது நபி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படும் பட்சத்தில் இந்தியா அணிக்கு கடுமையான சவால் காத்திருக்கும்.

அஜிங்கியா ரஹானே தலைமையில்

அஜிங்கியா ரஹானே தலைமையில்

இந்திய அணியில் கேப்டன் பொறுப்பை ரஹானே ஏற்று கொண்டுள்ளார். விராட் கோஹ்லி, புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இல்லாமல் இந்திய அணி ஆப்கான் அணியை எதிர் கொள்கிறது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்பியுள்ள இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேன் தினேஷ் கார்த்திக் கண்டிப்பாக சிறப்பாக விளையாடி தன்னை நிரூபிக்கும் கட்டாயத்தில் உள்ளார்.

 தொடக்க ஆட்டமே அதிரடியாக இருக்குமா

தொடக்க ஆட்டமே அதிரடியாக இருக்குமா

துவக்க ஆட்டக்காரர்கள் விஜய் மற்றும் தவான் சிறப்பாக விளையாடி நல்ல தொடக்கம் கொடுக்க வேண்டியது அவசியம். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய உமேஷ் யாதவ், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டியா மற்றும் கேப்டன் ரஹானே மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அவர்கள் அதனை பூர்த்தி செய்வார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

 டெஸ்ட் நாயகன் புஜாரா

டெஸ்ட் நாயகன் புஜாரா

இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் ஆடிய அனுபவம் இஷாந்த் ஷர்மா மற்றும் புஜாரா இவர்களுக்கு கை கொடுக்கும். அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நிலையில் ,இந்த போட்டி அவரின் திறமையை வெளிப்படுத்தும் என நம்பலாம். மொத்தத்தில் இந்தியா அணிக்கு ஒரு மிகப்பெரிய சவால் காத்து கொண்டிருக்கிறது. இதுவரை எந்த அணியும் தான் பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது இல்லை. ஆப்கானிஸ்தான் அந்த வரலாற்றை மாற்றி எழுதுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!!





Story first published: Wednesday, June 13, 2018, 19:33 [IST]
Other articles published on Jun 13, 2018
English summary
Afganisthan are going to play its first ever test matc versus India in Bangalore tomorrow.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X