For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலககோப்பை - இங்கிலாந்துடன் மோதி 10 வருசம் ஆச்சா? கடைசியாக நடந்த போது என்ன ஆச்சு தெரியுமா?

அடிலெய்ட் : டி20 உலககோப்பையில் வியாழக்கிழமை இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்தை அரையிறுதியில் எதிர்கொள்கிறது.

இதில் வெற்றி பெறும் அணி, பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும்.ஆனால், இங்கிலாந்தை எதிர்கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

இதுவரை இந்தியா, இங்கிலாந்து அணிகள் 22 முறை சர்வதேச டி20 போட்டியில் மோதி உள்ளன. இதில் இந்தியா 12 முறையும், இங்கிலாந்து 10 முறையும் வென்றுள்ளது.

டி20 உலககோப்பை அரையிறுதி சுற்று - மழையால் ஆட்டம் ரத்தானால் என்ன ஆகும்.. பைனலுக்கு செல்வது யார்? டி20 உலககோப்பை அரையிறுதி சுற்று - மழையால் ஆட்டம் ரத்தானால் என்ன ஆகும்.. பைனலுக்கு செல்வது யார்?

யுவராஜ் சிக்சர்

யுவராஜ் சிக்சர்

ஆனால், டி20 உலககோப்பையில் இரு அணிகளும் கடைசியாக மோதி 10 ஆண்டுகள் ஆகிறது என்று சொன்னால் நம்ப முடியுமா. முதல் முறையாக 2007ஆம் ஆண்டு விளையாடிய போது, யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசி சாதனை படைத்ததை நம் யாராலும் மறக்க முடியாது. இதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு மீண்டும் இரு அணிகளும் மோதிய போது, அது இந்தியாவுக்கு வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்தது.

2009ஆம் ஆண்டு தோல்வி

2009ஆம் ஆண்டு தோல்வி

ஆனால், அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் பிறகு மீண்டும் 2012ஆம் ஆண்டு தான் இவ்விரு அணிகளும் கடைசியாக மோதின. அதன் பிறகு இவ்விரு அணிகளும் டி20 உலககோப்பையில் ஒரு முறை கூடு சந்திக்கவில்லை. அப்போது முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 170 ரன்கள் அடித்தது.

80 ரன்கள்

80 ரன்கள்

அதில் இப்போதைய கேப்டன் ரோகித் சர்மா 55 ரன்களும், விராட் கோலி 40 ரன்களும் , கம்பீர் 45 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி வெறும் 80 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை தழுவியது. இதில் ஹர்பஜன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நாளை வியாழக்கிழமை நடைபெறும் போட்டியில் இதே போன்ற முடிவை இந்தியா செய்யுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அரையிறுதி ஆட்டம்

அரையிறுதி ஆட்டம்

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை டேவிட் மாலன், மார்க் வுட் ஆகியோர் நாளைய ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது. ஆனால், பட்லர், ஸ்டோக்ஸ், மொயின் அலி , ஆதில் ரஷித் போன்ற பலமான வீரர்கள் உள்ளனர். இதனால் அரையிறுதி ஆட்டம் நிச்சயம் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Wednesday, November 9, 2022, 21:31 [IST]
Other articles published on Nov 9, 2022
English summary
India and England Facing in ICC T20 World cup after 10 years of gap டி20 உலககோப்பை - இங்கிலாந்துடன் மோதி 10 வருசம் ஆச்சா? கடைசியாக நடந்த போது என்ன ஆச்சு தெரியுமா?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X