For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.யின் முதுகெலும்பை முறித்த இந்தியா.. உலககக் கோப்பையில் இமாலய ஸ்கோர் இது!

Recommended Video

INDvsAUS | ஆஸி.யின் முதுகெலும்பை முறித்த இந்தியா... அதிரடியால் மிரட்டிய வீரர்கள்

லண்டன்: 352க்கு 5.. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா அடித்த இமாலய ஸ்கோர் இது.

ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக இன்று ரசிகர்களுக்கு அருமையான விருந்து படைத்து விட்டது இந்தியா. ஆஸ்திரேலியாவை சூ வென ஊதித் தள்ளிய இந்திய வீரர்கள் அதிரடியாக ரன்களைக் குவித்து அசத்தி விட்டனர்.

50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 352 ரன்களைக் குவித்தது இந்தியா. ரோஹித் 57 ரன்களில் செல்ல, ஷிகர் தவான் பிரித்து மேய்ந்து விட்டார். வெளுத்தெடுத்த அவர் அபாரமான சதம் போட்டார். 117 ரன்களை தவான் கொளுத்த, விராத் கோலி மறுபக்கம் 82 ரன்களைக் குவிக்க இந்தியா இமாலய ஸ்கோரை எட்டியது. ஹர்டிக் பாண்ட்யாவின் அபார ஆட்டத்தையும் இதில் முக்கியமாக சொல்லியாக வேண்டும்.

ஆஸி.க்கு எதிராக

ஆஸி.க்கு எதிராக

இந்தியா இன்று எடுத்த ஸ்கோர், உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா எடுத்த மிகப் பெரிய ஸ்கோர் ஆகும். சமீபகாலத்தில் இந்தியா இப்படி ஒரு பிரமாதமான பேட்டிங்கை காட்டியதில்லை என்று கூறும் அளவுக்கு இது ஒரு குபீர் ஆட்டமாக அமைந்தது. ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களை நையப்புடைத்த இந்திய வீரர்கள், ஆஸ்திரேலிய பீல்டிங்குக்கும் செம வேலை வைத்து விட்டனர்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் உலகக் கோப்பைப் போட்டிகளில் மொத்தம் 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 8 முறை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. அதில் ஒன்று இறுதிப் போட்டியாகும். இன்று அந்த கணக்கை நேர் செய்ய இந்தியா கடுமையாக முயலும் எனத் தெரிகிறது. அதன் வெளிப்பாடே இன்றைய முரட்டு பேட்டிங்.

ஓட்டை பவுலிங்

ஓட்டை பவுலிங்

ஒரு நாள் போட்டிகளில் 11வது முறையாக 350 ரன்களை இன்று ஆஸ்திரேலியா விட்டுக் கொடுத்துள்ளது. இது அந்த நாட்டு ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவின் பேட்டிங்கை ஆஸ்திரேலியா குறைத்து மதிப்பிட்டு விட்டதாகவே கருதப்படுகிறது. இந்தியா இப்படி ஒரு பேட்டிங்கை வெளிப்படுத்தும் என ஆஸ்திரேலியா எதிர்பார்க்கவில்லை.

சாம்பியனுக்கே நாங்க சாம்பியன்

சாம்பியனுக்கே நாங்க சாம்பியன்

ஆரம்ப ஓவர்களில் சாம்பியன் போல பந்து வீசியது ஆஸ்திரேலியா. இதனால் ரோஹித் சற்று நிதானம் காட்டினார். ஆனால் ஷிகர் தவான் அதை காலி செய்து விட்டார். நீங்க சாம்பியன்னா.. நாங்க சாம்பியனுக்கே சாம்பியன்டா என்பது போல ஷிகர் தவான் அதிரடி காட்ட ஆஸ்திரேலாயவின் மன உறுதி சற்றே சீர்குலைந்தது. அதை பயன்படுத்தி நொறுக்கி விட்டனர் தவானும், பின்னர் கோலியும்.

Story first published: Sunday, June 9, 2019, 20:23 [IST]
Other articles published on Jun 9, 2019
English summary
Indian batsmen have scored the big score against Australia in the WC.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X