For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனிக்கு ஓய்வு கொடுங்க.. இவங்க எல்லோருக்கும் வாய்ப்பு கொடுங்க! ஏன் தெரியுமா?

Recommended Video

India vs Aus 2nd T20 | தோனிக்கு ஓய்வு கொடுங்க: முன்னாள் வீரர் ஹேமங் பதானி கருத்து

பெங்களூரு : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தோனிக்கு ஓய்வு கொடுத்து விட்டு விஜய் ஷங்கரை களம் இறக்கலாம் என முன்னாள் வீரர் ஹேமங் பதானி கருத்து கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. அதை தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

முதல் போட்டியில் வாய்ப்பு

முதல் போட்டியில் வாய்ப்பு

இந்தியா இந்த தொடரை உலகக்கோப்பைக்கான பரிசோதனையாக மாற்றிக் கொண்டுள்ளது. அதன் படி, முதல் டி20யில் இந்தியா அறிமுக வீரர் மாயங்க் மார்கண்டே, உமேஷ் யாதவ், ராகுல் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு அளித்தது.

விஜய் ஷங்கர் இல்லை

விஜய் ஷங்கர் இல்லை

அதே சமயம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் ஷங்கருக்கு அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், தோனி என மூன்று விக்கெட் கீப்பர்களும் அணியில் ஆடினர்.

தோனிக்கு ஓய்வு

தோனிக்கு ஓய்வு

இரண்டாம் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழலில் யாரை ஆட வைக்கலாம்? என்ற கேள்வி உள்ளது. முன்னாள் வீரர் ஹேமங் பதானி தோனிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தினேஷ் - ரிஷப் பண்ட்

தினேஷ் - ரிஷப் பண்ட்

தோனி உலகக்கோப்பையில் நிச்சயம் முதல் விக்கெட் கீப்பராக ஆடப் போகிறார் என்னும் பட்சத்தில் அவருக்கு ஓய்வு கொடுத்து விட்டு தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு

விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு

தோனிக்கு ஓய்வு கொடுக்கும் பட்சத்தில் விஜய் ஷங்கரை அணியில் சேர்த்து உலகக்கோப்பைக்கு முன் அதிக போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் எனவும் கூறி உள்ளார். விஜய் ஷங்கர் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, February 27, 2019, 14:38 [IST]
Other articles published on Feb 27, 2019
English summary
India vs Australia 2nd T20I : Vijay Shankar in and Dhoni out says this former TN cricketer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X