For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG 2nd Test: வானிலை நிலவரம் என்ன? இந்தியா பிளேயிங் லெவன் என்ன? - முழு விவரம்

லண்டன்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (ஆக.12) தொடங்குகிறது. இந்த போட்டி மீண்டும் மழையால் பாதிக்க வாய்ப்புள்ளதா?

நாட்டிங்கமில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு மழையால் பறிபோன நிலையில், பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 2வது போட்டி நடைபெறுகிறது.

அடுத்த 3 ஒலிம்பிக்கிற்கான நகரங்கள் தயார்.. எங்கு, எப்போது போட்டிகள்?.. முழு விவரம் இதோ! அடுத்த 3 ஒலிம்பிக்கிற்கான நகரங்கள் தயார்.. எங்கு, எப்போது போட்டிகள்?.. முழு விவரம் இதோ!

இப்போட்டி லண்டனில் உள்ள கிரிக்கெட்டின் சொர்க்கபுரியான லார்ட்ஸில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. பிற்பகல் 3 மணிக்கு டாஸ் போடப்படும்.

 India vs England 2nd Test Weather Condition

India vs England 2nd Test Weather Condition

முதல் டெஸ்ட் நடைபெற்ற நாட்டிங்கமிலிருந்து லண்டனை அடைய கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆகும். இரண்டு இடங்களிலும் வானிலை மிகவும் வித்தியாசமானது. நாளை தொடங்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், Accuweather படி, அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். Ind vs Eng 2 வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் மழை பெய்ய வாய்ப்பில்லை. இதற்குப் பிறகு, ஆகஸ்ட் 13 வெள்ளிக்கிழமை, லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் இருக்கும் வெப்பநிலை அப்படியே இருக்கும். அதன் பிறகு வானிலை சற்று இனிமையாக இருக்கும். சில மேகக் கூட்டங்களை காணலாம்.

ஆகஸ்ட் 14 சனிக்கிழமை, அதாவது ind vs eng 2 வது டெஸ்டின் 3 வது நாள் மற்றும் ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக்கிழமையும் வானிலை இதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா vs இங்கிலாந்து 2 வது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது மற்றும் கடைசி நாள் அதாவது ஆகஸ்ட் 16 அன்று, மழை பெய்ய வாய்ப்பில்லை.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி திங்கட்கிழமை மாலை லண்டனுக்குச் சென்றது, இலங்கையில் இருந்து இங்கிலாந்து சென்ற சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்வி ஷா தற்போது நாட்டிங்கமில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்துள்ளனர்.

இந்தியா - இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டியை Sony Sports Network-ல் காணலாம். ஆன்லைனில், தமிழ் மைக்கேல் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை கண்டுகளிக்கலாம்.

 India Playing XI

India Playing XI

ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா / ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

 England Playing XI

England Playing XI

ரோரி பர்ன்ஸ், டோம் சிப்லி, ஜாக் கிராவ்லி, ஜோ ரூட் (c), ஜானி பேர்ஸ்டோ, டான் லாரன்ஸ், ஜோஸ் பட்லர், ஓலே ராபின்சன், மார்க் வூட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்

 ENG vs IND SQUADS

ENG vs IND SQUADS

இங்கிலாந்து அணி: ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, ஜாக் கிராவ்லி, ஜோ ரூட் (c), ஜானி பேர்ஸ்டோ, டேனியல் லாரன்ஸ், ஜோஸ் பட்லர் (w), ஓலே ராபின்சன், மார்க் வூட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டன், சாம் கர்ரன், ஜாக் லீச் , டொமினிக் பெஸ், ஓலே போப், ஹசீப் ஹமீட்

இந்திய அணி: ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், அக்சர் பட்டேல் , விருத்திமான் சாஹா, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, அபிமன்யு ஈஸ்வரன்

Story first published: Thursday, August 12, 2021, 8:11 [IST]
Other articles published on Aug 12, 2021
English summary
india vs england 2nd test weather playing xi - இந்திய அணி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X