For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

India vs NZ 2nd T20 : கேப்டன் ரோஹித்.. தயவு செஞ்சு உருப்படியான டீம் எடுங்க!

ஆக்லாந்து : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன இரண்டாவது டி20 போட்டி நாளை (பிப்ரவரி 8) நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் யார் இடம் பிடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல் டி20 போட்டியில் இந்தியா பல பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டது. அவை பெரிய தோல்வி அடைந்ததோடு, இந்திய அணியும் படு தோல்வியை சந்தித்தது. இரண்டாவது போட்டியிலாவது கேப்டன் ரோஹித் வெற்றிக்கான சமநிலை கொண்ட அணியை தேர்வு செய்வாரா?

8 பேட்ஸ்மேன்கள் இருந்தும் தோல்வி

8 பேட்ஸ்மேன்கள் இருந்தும் தோல்வி

முதல் போட்டியில் இந்தியா மூன்று ஆல்-ரவுண்டர்களை கொண்டு களம் கண்டது. இதனால், அணிக்கு ரோஹித், தவான், விஜய் ஷங்கர், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா எட்டு பேட்ஸ்மேன்கள் இருந்தும் நியூசிலாந்து நிர்ணயித்த இமாலய இலக்கான 219 ரன்களை எட்ட முடியாமல் திணறியது இந்தியா.

பந்துவீச்சு கூட்டணி திணறல்

பந்துவீச்சு கூட்டணி திணறல்

அதே போல, ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா மற்றும் விஜய் ஷங்கர் என ஆல்-ரவுண்டர்களை கொண்ட பந்துவீச்சு கூட்டணியும் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. விஜய் ஷங்கருக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிடில் ஆர்டர் கவனம்

மிடில் ஆர்டர் கவனம்

இரண்டாவது போட்டியில் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் யாரை தேர்வு செய்வது என்பதில் தான் ரோஹித் கவனம் செலுத்த வேண்டும். ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் இருவரும் நல்ல பேட்ஸ்மேன்களே. ஆனால், அவர்கள் இருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து ஆட வேண்டும். முதல் போட்டியில் தோனி மட்டுமே மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளித்தார்.

இடத்துக்கு காத்திருக்கும் வீரர்கள்

இடத்துக்கு காத்திருக்கும் வீரர்கள்

முகமது சிராஜ் அல்லது சித்தார்த் கௌல் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. குல்தீப் யாதவ் கடந்த போட்டியில் ஆடவில்லை. அவரை இந்த போட்டியில் ரோஹித் ஆட வைப்பார் என எதிர்பார்க்கலாம். பேட்டிங்கில் ஷுப்மன் கில் தன் வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்.

அணித் தேர்வு எப்படி இருக்கும்?

அணித் தேர்வு எப்படி இருக்கும்?

இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் யாரை ஆட வைப்பது என்பது பெரும் குழப்பமாகவே இருக்கும். முதல் போட்டி போல இந்த போட்டியிலும் இந்தியா சோதனைகள் செய்து பார்க்க முற்படுமா என்பதை ஒட்டியே அணித் தேர்வு இருக்கும்.

ரசிகர்கள் பார்வை என்ன?

ரசிகர்கள் பார்வை என்ன?

ரசிகர்கள் பார்வையில், இந்தியா நிச்சயம் வெற்றிக்கான அணியை தேர்வு செய்வதில் தான் கவனம் செலுத்த வேண்டும். உலகக்கோப்பைக்கு முன்னர் இந்தியா ஆதிக்கம் செலுத்தி அதிக வெற்றிகள் பெற்றால் தான் நம்பிக்கையோடு இருக்க முடியும். கேப்டன் ரோஹித்.. தயவு செஞ்சு உருப்படியான டீம் எடுங்க!

Story first published: Thursday, February 7, 2019, 18:49 [IST]
Other articles published on Feb 7, 2019
English summary
India vs Newzealand : Will India continue experiments in 2ndT20 match?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X