For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND Vs PAK: உலக கோப்பையில் மறக்க முடியாத இந்தியா Vs பாகிஸ்தான் போட்டிகள்…!! ஒரு ப்ளாஷ்பேக்…!!

லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் போட்டிகளை எதிர் பார்த்துள்ள ரசிகர்கள், பழைய முக்கிய மேட்சுகளை தேடி பிடித்து அசைபோட ஆரம்பித்து விட்டனர். அதில் மறக்க முடியாத, 3 முக்கிய மேட்சுகளை பார்க்கலாம்.

கிரிக்கெட் உலகில் மிகப்பெரும் வர்த்தகத்தை தன்னுள்ளே கொண்டிருக்கும் ஒரே போட்டி.... அக்மார்க் போட்டி.. இந்தியா, பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் ஆட்டம். மற்ற போட்டிகளை காட்டிலும் உலக கோப்பை தொடர் என்றுமே ஸ்பெஷல்.

காரணம்.. எந்த உலக கோப்பை தொடரிலும் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. ஏதாவது ஒரு போட்டியிலாவது வென்று வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று நினைக்கும் பாகிஸ்தானுக்கு ஏமாற்றமே இதுவரை கிடைத்துள்ளது. அதுபோன்று ஏமாற்றம் அளித்த 3 முக்கியமான மேட்சுகள், இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் குறித்து இப்போது பார்க்கலாம்...

ஒரு சூப்பர் நியூஸ்.. மழையே பெய்தாலும், இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்தாகாது.. எப்படி தெரியுமா? ஒரு சூப்பர் நியூஸ்.. மழையே பெய்தாலும், இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்தாகாது.. எப்படி தெரியுமா?

இந்தியாவின் சாதனை வெற்றி

இந்தியாவின் சாதனை வெற்றி

ஆறு முறை நடந்த உலக கோப்பை தொடரில்... பாக்.கிற்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் இந்தியாவுக்கு ஜெயமே. இந்தியா உலக கோப்பையில் பாகிஸ்தானை சொந்த கண்டத்தில் மட்டுமல்லாமல் மற்ற அனைத்து கண்டங்களிலும் சாய்த்திருக்கிறது. இந்திய அணி அனைத்து உலக கோப்பை தொடர்களிலும் பாகிஸ்தானை எதிர் கொண்டுள்ளது.

19830ம் ஆண்டு போட்டி

19830ம் ஆண்டு போட்டி

1975 மற்றும் 1979 ஆண்டுகளில் இந்தியாவின் உலக கோப்பை செயல்பாடு படு மோசம். அந்த தொடர்களில் உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானை சந்திக்கவில்லை. 1983ம் ஆண்டில் தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.இந்திய அணி 1983ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய சமயத்தில் அரையிறுதிக்குள் பாகிஸ்தானும் நுழைந்திருந்தது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அரையிறுதியில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

செமி பைனலில் வெளியேற்றம்

செமி பைனலில் வெளியேற்றம்

1987 உலக கோப்பை தொடரில் இந்தியா இறுதி தகுதிச் சுற்றில் நியூசிலாந்திற்கு எதிராக 101 ரன்கள் வித்தியாசத்தில் வென்று லாகூரில் நடைபெற இருந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டியை மாற்றியது. ஆனாலும், இரு அணிகளுமே அரையிறுதியில் முறையே இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவால் வெளியேற்றப்பட்டன.

சந்தித்த தொடர்கள்

சந்தித்த தொடர்கள்

சிட்னியில் 1992 உலக கோப்பை தொடரிலிருந்து தொடங்கி, 1996, 1999, 2003 ஆகிய ஆண்டுகளில் இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் நடந்து வருகின்றன. 2007 உலக கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்பாராவிதமாக வங்கதேசத்திடம் தோற்றது. அயர்லாந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. 2011, 2015 உலக கோப்பை தொடரிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

சிறந்த 3 போட்டிகள்

சிறந்த 3 போட்டிகள்

பாக்.க்கு எதிராக இந்தியா 3 சிறந்த போட்டிகளில் முக்கியமானது 2003ம் ஆண்டு செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டம் தான். அந்த தொடரில் சூப்பர் சிக்சில் செஞ்சூரியனில் பாகிஸ்தானிற்கு எதிராக மோதியது. இந்த உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதும் முன் ஆஸ்திரேலிய போட்டியை தவிர இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது.

பாக். பேட்டிங்

பாக். பேட்டிங்

பாகிஸ்தான் கிட்டத்தட்ட அந்த உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறி விட்டது. இருப்பினும் இந்தியாவை வீழ்த்தி ஆவேசத்தை தணிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் களம் கண்டது. டாஸ் வென்று பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கு ஒரு சிறப்பு உண்டு. அதாவது, இவ்விரு அணிகளும் மோதிய 6 உலக கோப்பை போட்டிகளில் இந்த போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.

சதமடித்த அன்வர்

சதமடித்த அன்வர்

சயீத் அன்வரின் சிறப்பான சதத்தின் மூலம் பாகிஸ்தான் 273 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது. அடுத்து களம் இறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் சேவாக், சச்சின் ஜோடி வாசிம் அக்ரம், சோயிப் அக்தர், வக்கார் யூனிஸ் ஆகியோர்களை பந்துகளை அனாயசமாக எதிர் கொண்டனர்.

50 ரன்கள்

50 ரன்கள்

சோயிப் அக்தர் வீசிய 2வது ஓவரில், முதல் பந்தில் சச்சின் சிக்சரும், அடுத்த 2 பந்துகளில் இரு பவுண்டரிகளையும் விளாசினர். தொடர்ந்து சேவாக்கும் வக்கார் யூனிஸ் வீசிய ஓவரில் 1 சிக்சர் மற்றும் பவுண்டரியை விளாசினார். இந்தியா முதல் 5 ஓவர்களிலேயே 50 ரன்களை குவித்து தள்ளியது. சேவாக் அவுட்டாக, கங்குலி வந்தார். பின்னர் முகமது கைப் களமிறங்கி பொறுப்பான, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

100 ரன்கள்

100 ரன்கள்

மறு முனையில் சச்சின் அதிரடியை நிறுத்தவில்லை. 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 50 ரன்களை விளாசினார். வாசிம் அக்ரம் தான் வீசிய முதல் ஓவரில் 18 ரன்களை அள்ளி வழங்கினார். பின்னர் அவர் வீசிய அடுத்த இரு ஓவர்களிலும் 18 ரன்களை குவித்தார். இந்திய அணி 12 ஓவர்களில் 100 ரன்களை குவித்தது.

சச்சின் இன்னிங்ஸ்

சச்சின் இன்னிங்ஸ்

சச்சின் 98 ரன்கள்... வாசிம் அக்ரம் வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் இந்திய அணி 28 ஓவர்களில் 181 ரன்களை குவித்தது. உலக கோப்பையில் பாகிஸ்தானிற்கு எதிராக சச்சினின் சிறந்த இன்னிங்ஸ் இதுதான். யுவராஜ் சிங் அரைசதம் விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார். டிராவிட் 44 ரன்களில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன் மூலம் உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானிற்கு எதிராக சிறந்த வெற்றியை பெற்றது.

முதல் முறை நாக் அவுட்

முதல் முறை நாக் அவுட்

1996ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தை அவ்வளவு யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. உலக கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் முதல் முறையாக நாக் அவுட் சுற்றில் மோதிய போட்டி இது தான். எனவே... அந்த போட்டி கூடுதல் சிறப்பு. நடப்பு சாம்பியன் என்ற தோரணையுடன் பாகிஸ்தான், இந்திய மண்ணில் இந்தியாவை எதிர் கொண்டது. போட்டியில் இந்தியா வென்றால் பாகிஸ்தானில் நடைபெறும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் இந்தியா பங்கேற்கும் சூழல்.

அக்ரம் இல்லை

அக்ரம் இல்லை

இந்திய அணி தனது சொந்த மண்ணில் 9 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை தொடரில் பங்கேற்றது. வாசிம் அக்ரமிற்கு காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியில் பங்கேற்கவில்லை. எனவே, கேப்டன் அமீர் சோகைல் பந்து வீச்சை மேற்கொண்டார். தொடக்க ஆட்டக்காரர்கள் சித்து மற்றும் சச்சின் முதல் விக்கெட்டிற்கு 90 ரன்களை குவித்தனர்.

287 ரன்கள் இலக்கு

287 ரன்கள் இலக்கு

பின்னர் சச்சின் அட்டாவுர் ரஹ்மானால் வீழ்த்தப்பட்டார். சித்து நிலைத்து விளையாடி 93 ரன்களை குவித்தார். இறுதிகட்டத்தில், அஜய் ஜடேஜா, வக்கார் யூனிஸ் பவுலிங்கை ஒரு கை பார்த்தார். கடைசி இரு ஓவர்களில் 40 ரன்களை எடுத்தார். கடைசி 4 ஓவரில் 57 ரன்களை விளாசி 287 ரன்களை பாகிஸ்தானிற்கு இலக்காக நிர்ணயித்தது நிர்ணயித்தது.

அமீர் சோகையிலின் வம்பு

அமீர் சோகையிலின் வம்பு

பின்னர் வந்த பாகிஸ்தான் தொடக்கத்தில் பதிலடி தந்தது. முதல் 10 ஓவர்களில் 87 ரன்களை குவித்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சயீத் அன்வரை, ஶ்ரீநாத் காலி செய்தார். பாகிஸ்தான் 113 ரன்களில் 1 விக்கெட்டை இழந்திருந்த போது கேப்டன் அமீர் சோகைல் பவுண்டரி விளாசி பவுலர் வெங்கடேஷ் பிரசாத்திடன் வம்பிழுத்தார். ஆனால், அதற்கு அடுத்த பந்திலேயே அவரிடமே போல்டாகி விக்கெட்டை பறி கொடுத்தார்.

இந்தியா ஜெயம்

இந்தியா ஜெயம்

இதற்கு பிறகு ஜவாத் மற்றும் இன்ஜமாம்-உல்-ஹக் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார் வெங்கடேஷ் பிரசாத். அதன் காரணமாக, சலீம் மாலிக், மியாண்டட் ஆகியோருக்கு சுமை அதிகமானது. கடைசியில் இந்தியாவுக்கு தான் வெற்றி கிடைத்தது.

தோனியின் அதிரடி

தோனியின் அதிரடி

2011 உலக கோப்பையில் அரையிறுதியில் பாகிஸ்தானை, இந்தியா சந்தித்தது. டாஸ் வென்ற தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். உமர் குல்லின் வேகப்பந்து வீச்சை சரியாக எதிர் கொண்டு 2வது ஓவரில் 5 பவுண்டரிகளை விளாசினார். 6வது ஓவரில் தனது விக்கெட்டை இழக்கும் முன்பாக சேவாக் 25 பந்துகளில் 38 ரன்களை விளாசினார்.

கோட்டை விட்ட கேட்சுகள்

கோட்டை விட்ட கேட்சுகள்

சச்சினும் அதிரடியை வெளிப்படுத்த தவறவில்லை. 4 முறை அவர் கொடுத்த கேட்சுகளை கோட்டை விட்டனர் பாக். வீரர்கள். இரு முறை டிஆர்எஸ்சால் தப்பினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 85 ரன்களை குவித்தார். தோனி, ரெய்னாவின் சிறப்பான ஆட்டத்தால் 260 என்ற சற்று கடின இலக்கை பாகிஸ்தானுக்கு இந்தியா நிர்ணயித்தது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

தொடக்கத்திலேயே, பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களில் தடுமாறியது. சபிக் மற்றும் யூனிஸ் கான் ஆகியோரை யுவராஜ் சிங் தனது மாயாஜால சுழலினால் வீழ்த்தினார். ஹர்பஜன் சிங் மிடில் ஆர்டர் பேட்ஸ் மேன்களான உமர் அக்மல் மற்றும் கேப்டன் அப்ரிடியின் விக்கெட்டை தன்வசப்படுத்தினார். மிஸ்பா-உல்-ஹக் இறுதி வரை ஆட்டமிழக்காமல் கடைசி ஓவர் வரை நிலைத்து விளையாடினார். ஆனாலும் வெற்றியை தொட முடியவில்லை. இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Saturday, June 15, 2019, 14:10 [IST]
Other articles published on Jun 15, 2019
English summary
India Vs Pakistan memorable matches in world cup history.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X