For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்களும் நல்ல டீம் தான்.. ஆடிக் காட்டிய வெ.இண்டீஸ்.. முன்யோசனை இல்லாத கோலி

Recommended Video

இரண்டாவது டெஸ்ட் போட்டி , வெ.இண்டீஸ் பேட்டிங்- வீடியோ

ஹைதராபாத் : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று சாதனை புரிந்தது.

அனுபவ வீரர்கள் இல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வரும் நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலாவது மீளுமா? அல்லது மீண்டும் ஒரு முறை மோசமான தோல்வியை தழுவுமா? என்ற கேள்விகளோடு ஆட்டத்தை துவங்கியது அந்த அணி.

வெஸ்ட் இண்டீஸ் மாற்றங்கள்

வெஸ்ட் இண்டீஸ் மாற்றங்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜேசன் ஹோல்டர் காயத்தில் இருந்து மீண்டு அணியில் இடம் பிடித்துள்ளார். இவரே இந்த போட்டியின் கேப்டன். கேப்டனின் வரவு அணிக்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கலாம். மற்றொரு மாற்றமாக, சுழற்பந்துவீச்சாளர் ஜோமல் வாரிக்கன் அணியில் இடம் பிடித்துள்ளார். அனுவப வீரர் கீமர் ரோச் மற்றும் சென்ற போட்டியில் அறிமுகமான ஷீமன் லெவிஸ் ஆகியோருக்கு பதிலாக இவர்கள் இருவர் இடம் பிடித்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முழு நேர சுழற்பந்துவீச்சாளர்களோடு களம் இறங்குகிறது.

அறிமுகமாகும் ஷர்துல்

அறிமுகமாகும் ஷர்துல்

இந்தியாவை பொறுத்தவரை, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பலவீனம் இந்தியாவின் பெரும் பலமாக உள்ளது. இந்திய அணி பரிசோதனை முயற்சியாக முகமது ஷமிக்கு பதிலாக ஷர்துல் தாக்குரை பந்துவீச்சில் களம் இறக்கியது. இவருக்கு இதுவே டெஸ்ட் அறிமுகம். ஷர்துல் இந்தியாவின் 294வது டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அறிமுகம் ஆகியுள்ளார். ஆனால், அதிர்ஷ்டம் இல்லாத ஷர்துல் தாக்குர் வெறும் பத்து பந்துகளே வீசிய நிலையில் காயம் ஏற்பட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். நாளை அவர் பந்து வீசுவாரா? என்பது சந்தேகமாகவே உள்ளது.

வீரர்கள் விவரம்

வீரர்கள் விவரம்

வெஸ்ட் இண்டீஸ் அணி - ப்ராத்வைட், போவெல், ஹோப், ஹெட்மையர், அம்ப்ரிஸ், சேஸ், டோவ்ரிச், ஹோல்டர் (கேப்டன்), வாரிக்கன், பிஷூ, காப்ரியல்

இந்திய அணி - ராகுல், ப்ரித்வி ஷா, கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர்

வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்

வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்கத்தில் வழக்கம் போல தடுமாறியது. ஒரு கட்டத்தில் 182 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, பின்னர் சேஸ் மற்றும் கேப்டன் ஹோல்டரின் பொறுப்பான ஆட்டத்தால் மீண்டது. ஹோல்டர் 52 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து சேஸ் 98 ரன்கள் அடித்து இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 95 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்துள்ளது. பந்துவீச்சில் இந்தியா சரியாக ஐந்து முழு நேர பந்துவீச்சாளர்கள் மட்டுமே கொண்டு களம் இறங்கியது. பகுதி நேர பந்துவீச்சாளர்களே இல்லாத நிலையில் ஷர்துல் தாக்குர் காயமடைந்ததால், அஸ்வின், ஜடேஜா, குல்தீப், உமேஷ் மட்டுமே பந்து வீசி வருகின்றனர். கோலி அணி தேர்வு செய்யும் போது முன் யோசனை இல்லாமல் இருந்துள்ளார் என்பது இதன் மூலம் தெரிகிறது.

Story first published: Friday, October 12, 2018, 17:31 [IST]
Other articles published on Oct 12, 2018
English summary
India vs West Indies second test match at Hyderabad - Live update score
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X