For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடப் பாவமே! முதல்ல ஆண்கள் அணி.. அப்புறம் பெண்கள் அணி.. மாத்தி மாத்தி அடி வாங்கும் நியூசி.

Recommended Video

இந்தியா-நியூசி மகளிர் தொடர்:தொடரை வென்றது இந்தியா- வீடியோ

மவுன்ட் மௌங்கனி : இந்திய மகளிர் அணி, நியூசிலாந்து அணியை இரண்டு போட்டிகளில் வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றி உள்ளது.

முன்னதாக இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளை வென்று தொடரை வென்றது. அடுத்து, இந்திய மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி உள்ளது.

முதல் ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 192 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணியில் ரோட்ரீகஸ் 81 ரன்கள், ஸ்மிருதி மந்தனா 105 ரன்கள் எடுக்க இந்தியா 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டி வெற்றி

இரண்டாவது போட்டி வெற்றி

இரண்டாவது போட்டியிலும் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதலில் 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் ஜூலன் கோஸ்வாமி 3 விக்கெட்கள் வீழ்த்தினார். அடுத்து ஆடிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மீண்டும் தன் அதிரடி ஆட்டம் மூலம் கை கொடுத்தார்.

ஒருநாள் தொடர் வெற்றி

ஒருநாள் தொடர் வெற்றி

ஸ்மிருதி மந்தனா 90, கேப்டன் மிதாலி ராஜ் 63 ரன்கள் அடித்து இரண்டாவது போட்டியில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது இந்திய மகளிர் அணி.

இரு அணிகளும் அசத்தல்

இரு அணிகளும் அசத்தல்

நியூசிலாந்து ஆடவர் அணி வலுவான நிலையில் இருந்தாலும், இந்திய அணியின் பந்துவீச்சுக்கு முன் அதன் ஜம்பம் பலிக்கவில்லை. அதே போல இந்திய மகளிர் அணியை எதிர்த்தும் நியூசிலாந்து மகளிர் அணியால் தாக்குப் பிடித்து பேட்டிங் செய்ய முடியவில்லை.

ஐசிசி ஒருநாள் சாம்பியன்ஷிப்

ஐசிசி ஒருநாள் சாம்பியன்ஷிப்

மகளிர் கிரிக்கெட்டில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் ஐசிசி ஒருநாள் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கம் என்பதால் இந்திய அணிக்கு இந்த வெற்றி முக்கியமான ஒன்றாகும். இந்த தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது. அதிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றால் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக புள்ளிகள் பெற முடியும்.

Story first published: Tuesday, January 29, 2019, 16:57 [IST]
Other articles published on Jan 29, 2019
English summary
Indian women clinch series against NZ after Men in blue did a day ago.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X