For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டாஸ் ஜெயிப்போம்.. ஆனா பேட்டிங் எடுக்க மாட்டோம்.. அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. இதுதான் காரணமா?

Recommended Video

டாஸ் தீர்மானத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்

ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரில் புதிதாக ஒரு விஷயம் நடந்து வருகிறது. ஐபிஎல் அணிகள் தொடர்ந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்புகின்றன என தெரிய வந்துள்ளது.

டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் ஆடி அதிக ஸ்கோர் எடுத்த பின்னர், அடுத்து ஆடும் அணிக்கு அழுத்தம் கொடுத்து வெற்றி பெறுவது என்ற முறையை பல அணிகள் முன்பு பின்பற்றி வந்தன. தற்போது அணிகள் பந்துவீச்சை மட்டுமே தேர்வு செய்வதை பார்த்தால், இந்த முறை இப்போது வேலை செய்யவில்லையா? என கேட்கத் தோன்றுகிறது.

ரெய்னா தலைமையில் சிஎஸ்கே! அப்ப தோனி ஆடலையா? என்னங்க ஆச்சு தோனிக்கு? பரபரக்கும் ரசிகர்கள்! ரெய்னா தலைமையில் சிஎஸ்கே! அப்ப தோனி ஆடலையா? என்னங்க ஆச்சு தோனிக்கு? பரபரக்கும் ரசிகர்கள்!

முந்தைய ஐபிஎல் தொடர்கள்

முந்தைய ஐபிஎல் தொடர்கள்

இதற்கு முந்தைய ஐபிஎல் தொடர்களில் டாஸ் வெல்லும் அணிகள் எதிரணியின் பலம், ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப பந்துவீச்சு அல்லது பேட்டிங் என இரண்டையுமே மாற்றி, மாற்றி தேர்வு செய்தன.

பந்துவீச்சு தான்!

பந்துவீச்சு தான்!

ஆனால், 2019 ஐபிஎல் தொடரில் அடம்பிடித்து அனைத்து அணிகளும் டாஸ் வென்றால் பந்துவீச்சு தான் தேர்வு செய்வோம் என்ற நிலையை பின்பற்றி வருகின்றன. இதுவரை 33 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே டாஸ் வென்ற அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆச்சரியம்

ஆச்சரியம்

சுமார் 29 போட்டிகளில் பந்துவீச்சை எல்லா அணிகளும் சேர்ந்து தேர்வு செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, பந்துவீச்சை தேர்வு செய்த அணிகள் வெற்றி, தோல்வி இரண்டையுமே சந்தித்துள்ளன. அப்படி என்றால் சேஸிங் அத்தனை எளிதாக மாறிவிட்டதா?

பின்னிரவு பனி

பின்னிரவு பனி

இந்த மாற்றத்துக்கு காரணம், இரண்டாவதாக பந்துவீசும் அணிக்கு பின்னிரவு நேர பனியால் ஏற்படும் சிரமமே என சிலர் கூறுகிறார்கள். இதை பயன்படுத்தி முதலில் பந்துவீசும் அணி, ஸ்கோரை தெரிந்து கொண்டு, எதிரணியின் குறிப்பிட்ட பந்துவீச்சாளர்களை குறி வைத்து தாக்கும் முறையில் ஆடி வருகின்றன.

அதிரடி வீரர்கள்

அதிரடி வீரர்கள்

மற்றொரு காரணம், ஆடுகளம் மற்றும் அதிரடி வீரர்கள். சில ஆடுகளங்கள் பெரிய அளவில் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கின்றன. அனைத்து அணிகளும் அந்த ஆடுகளங்களில் முதலில் பந்துவீச விரும்புகின்றன. அதுபோல, அதிரடி வீரர்களை கொண்ட அணிகள், சேஸிங் தான் தங்கள் பலம் என எண்ணி பந்துவீச்சை தேர்வு செய்கின்றன.

Story first published: Wednesday, April 17, 2019, 22:38 [IST]
Other articles published on Apr 17, 2019
English summary
IPL 2019 : Only 4 times teams won toss and chose to bat in this season
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X