இப்படி மட்டும் நடந்தால் சோலி முடிஞ்சுடும்.. தட்டுத் தடுமாறும் பிசிசிஐ.. கலக்கத்தில் ஐபிஎல் அணிகள்!

மும்பை : 2020 ஐபிஎல் தொடரை தள்ளி வைத்துள்ளது பிசிசிஐ. பலரும் தொடரை ரத்து செய்யுமாறு கூறி வருகின்றனர்.

IPL 2020 | Huge loss will happen if IPL gets cancelled

ஆனால், இந்த நிலையில் தொடரை ரத்து செய்யும் முடிவை எடுத்தால் பலத்த நஷ்டம் ஏற்படும் என்ற புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.

அதனால் தான் பிசிசிஐ தற்காலிகமாக ஐபிஎல் தொடரை தள்ளி வைத்துள்ளது. ரத்து செய்தால் ஐபிஎல் அணிகள் பலத்த நஷ்டம் அடைய வேண்டிய நிலை ஏற்படும்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து துவங்கி உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 1,30,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுள்ளனர். 5,0௦௦க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் மக்கள் வீட்டுக்குள் முடங்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

விளையாட்டுப் போட்டிகள் பாதிப்பு

விளையாட்டுப் போட்டிகள் பாதிப்பு

மக்கள் கூட்டமாக கூட பல நாடுகளும் தடை விதித்து வருகின்றன. அதனால், விளையாட்டுப் போட்டிகள் பல நாடுகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிரிக்கெட் போட்டிகளுக்கும் இதே நிலை தான். ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர், இங்கிலாந்து - இலங்கை தொடர் ஆகியவை தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் நிலை

ஐபிஎல் நிலை

இந்த நிலையில், இந்தியாவின் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகம் இருந்தது. பார்வையாளர்கள் இல்லாத காலி மைதானத்தில் போட்டி நடைபெறும் என சிலர் கூறி வந்தனர்.

கங்குலி தள்ளி வைப்பு

கங்குலி தள்ளி வைப்பு

இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி ஐபிஎல் தொடரை தள்ளி வைக்கும் முடிவை எடுத்தார். கொரானா வைரஸ் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் விசா பிரச்சனை ஆகியவற்றின் காரணமாக மார்ச் 29 துவங்க இருந்த தொடரை ஏப்ரல் 15 வரை தள்ளி வைத்துள்ளார்.

மீண்டும் நடக்குமா?

மீண்டும் நடக்குமா?

ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15க்கும் பின்னும் நடக்குமா என்பது தெரியவில்லை. ஒருவேளை ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு தடைபட்டால் மிகப் பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படும். போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு குறைவான போட்டிகள் நடந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்கும்.

3000 கோடி நஷ்டம்

3000 கோடி நஷ்டம்

ஐபிஎல் தொடரை ரத்து செய்தால் மொத்தமாக 3000 கோடி முதல் 3500 கோடி வரை நஷ்டம் ஏற்படும். ஒவ்வொரு அணிக்கும் ஒளிபரப்பு உரிமைக்காக பிசிசிஐ-யிடம் இருந்து கிடைக்கும் சுமார் 100+ கோடிகள் கிடைக்காமலேயே போகும்.

டிக்கெட் விற்பனை

டிக்கெட் விற்பனை

மேலும், டிக்கெட் விற்பனை மூலம் ஆண்டுக்கு 300 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. அது மட்டுமின்றி, ரசிகர்களுக்கான சிறப்பு பூங்காக்களில் 50 கோடி வரை கிடைக்கும். இவை அனைத்துமே ஐபிஎல் அணிகளுக்கு கிடைக்கும் வருவாய் ஆகும். இதுவும் கிடைக்காமல் போகும்.

விளம்பர வருவாய்

விளம்பர வருவாய்

ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 3000 கோடி அளவுக்கு விளம்பரங்கள் மூலம் பெறும். ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டாலோ, சிறிய தொடராக மாற்றி அமைக்கப்பட்டாலோ, கடுமையாக பாதிப்படையும்.

600 பேருக்கு வேலைவாய்ப்பு

600 பேருக்கு வேலைவாய்ப்பு

அதே போல, ஐபிஎல் தொடர் சமயத்தில் மட்டும் எட்டு அணிகளில் சுமார் 600 பேர் வேலை வாய்ப்பை பெறுவார்கள். அவர்கள் அனைவருக்கும் தொடர் ரத்து செய்யப்பட்டால் வேலை கிடைக்காமல் போகும். மேலும், ஹோட்டல், பயணம் ஆகியவற்றுக்கு மட்டும் 50 கோடி வரை செலவு செய்யும். அந்த துறைக்கும் வருவாய் இழப்பு ஏற்படும்.

ஐபிஎல் நடக்குமா?

ஐபிஎல் நடக்குமா?

அதனால் தான் பிசிசிஐ ஐபிஎல் தொடரை ரத்து செய்யாமல், தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது. ஆனாலும், தற்போது கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் உலகம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020 : BCCI and IPL teams will lose more than 3000 crores if IPL gets cancelled
Story first published: Saturday, March 14, 2020, 15:46 [IST]
Other articles published on Mar 14, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X