For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தமுறை வேற மாதிரி இருக்கும்.. தோனி மொத்தமாக மாறிவிட்டார்.. சிஎஸ்கே கோச் உடைத்த செம சீக்ரெட்!

அபுதாபி: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தற்போது வேற லெவல் பலத்துடன் இருக்கிறார், இந்த முறை சிஎஸ்கே அணியும், ஐபிஎல் தொடரும் வேறு மாதிரி இருக்க போகிறது என்று சிஎஸ்கே அணியின் கோச் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் இரண்டு பரம வைரிகள் நாளை களத்தில் மோத இருக்கிறார்கள். மும்பை பால்டன்சும்.. சென்னை கிங்ஸ்சும் நேருக்கு நேர் மீண்டும் மோத உள்ளனர். கடந்த ஐபிஎல் தொடரின் பைனலில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க சென்னை தீவிரமாக தயாராகி வருகிறது.

வெற்றியோடு தொடரை ஆரம்பிக்க மும்பை இந்தியன்ஸ் மிக தீவிரமாக தயாராகி வருகிறது. இதனால் இப்போதே பிரஷர் மேல் பிரஷர் எகிற தொடங்கி உள்ளது.

ஒரே ஒரு பாட்டுதான்.. இருந்த மரியாதையும் க்ளோஸ்.. ஆர்பிசியை வைத்து செய்த கர்நாடக மக்கள்.. சர்ச்சை!ஒரே ஒரு பாட்டுதான்.. இருந்த மரியாதையும் க்ளோஸ்.. ஆர்பிசியை வைத்து செய்த கர்நாடக மக்கள்.. சர்ச்சை!

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த நிலையில் சிஎஸ்கே குறித்தும், தோனி குறித்தும் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேட்டி அளித்துள்ளார். அதில் , இந்த ஐபிஎல் மிகவும் வித்தியாசமாக இருக்க போகிறது. மன ரீதியாக தோனி இந்த போட்டிக்கு தயார் ஆகிவிட்டார். போட்டி மீது மிகவும் ஆர்வமாக இருக்கிறார். வித்தியாசமான கேமை ஆட அவர் முடிவு செய்துள்ளார். தோனி நல்ல பார்மில் இருக்கிறார்.

மாற்றமா

மாற்றமா

உடல் ரீதியாக எந்த மாற்றமும் அவரிடம் இல்லை. நல்ல பிட்டாக இருக்கிறார். ஆனால் மன ரீதியாக நிறைய மாற்றமா ஏற்பட்டடுள்ளது. அவரின் மனமும், உடலும் சரியாக இருக்கிறது. இந்த பிரேக்தான் அவரை மேலும் மாற்றி இருக்கிறது. ஆம், இந்த பிரேக் மூலம் தன்னிடம் இருக்கும் பழைய தோனியை அவர் மீட்டு எடுத்து இருக்கிறார். எம்எஸ் தற்போது தயாராகிவிட்டார். அவர் இனி புறப்பட தயார்.

நிறைய அனுபவம்

நிறைய அனுபவம்

அனுபவம் வாய்ந்த வீரர்கள் பார்மிற்கு திரும்பினால் அதன் பாதிப்பும், ரிசல்ட்டும் வேறு மாதிரி இருக்கும். தோனி இப்போது அப்படித்தான் இருக்கிறார். அவர் நினைத்தால் மொத்தமாக போட்டியை மாற்றிவிடுவார். தோனி மொத்தமாக மாறி, புதிய வலிமையோடு வந்து இருக்கிறார். 7 மாதம் முன் பார்த்தது போல அவர் இல்லை. அதை விட பல மடங்கு புத்துணர்ச்சியோடு அவர் இருக்கிறார்.

அனுபவம்

அனுபவம்

அவர் நினைத்தால் போட்டி மொத்தமாக மாறும். அவரின் அனுபவம்தான் அணியை வழி நடத்தி வருகிறது . தற்போது அது புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. ஓய்வு காலத்தில் தன்னை மிக சிறப்பாக தோனி தயார்படுத்தி உள்ளார். முதல் போட்டி இதனால் வேறு மாதிரி இருக்கும். முதல் போட்டி கண்டிப்பாக அதிக அழுத்தம் கொடுப்பதாக இருக்கும்.

மும்பை எப்படி

மும்பை எப்படி

அதுவும் மும்பை - சென்னை போட்டி என்றால் பிரஷர் இருக்கவே செய்யும். எம்ஐ அணியை மீண்டும் எதிர்கொள்வது புத்துணர்வு அளிக்கிறது. அவர்களும் வலுவான அணிதான். முதல் போட்டியின் முடிவை பொறுத்தே அணியை எந்த வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரியும். போட்டி வெளிநாட்டில் நடப்பதாலும், வீரர்கள் மாற்றம் காரணமாகவும் மொத்தமாக தொடரே வேறு மாதிரி இருக்க போகிறது, என்று பிளமிங் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, September 18, 2020, 22:12 [IST]
Other articles published on Sep 18, 2020
English summary
IPL 2020: CSK captaian Dhoni is in new form, match will be different says Coach of the team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X