அவர் போட்டுக்கொடுத்த பிளான்.. சிஎஸ்கே வீழ்ந்த நொடி.. இனி மறைக்க முடியாது.. ஒப்புக்கொள்ளுங்கள் தோனி!

துபாய்: நேற்று டெல்லிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததற்கு இரண்டு முக்கியமாக காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒரு காரணம் பாண்டிங்.. இன்னொரு காரணம் தோனி.

2020 ஐபிஎல் தொடர் சிஎஸ்கேவிற்கு மோசமான தொடராக மாறியுள்ளது. இதுவரை 9 போட்டிகளில் ஆடி உள்ள சிஎஸ்கே 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.

டெல்லி அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே தோல்வி அடைந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முதலில் ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய டெல்லி 19.5 ஓவரில் 185 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

காரணம்

காரணம்

இந்த போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைய முக்கியமாக காரணம் என்று பார்த்தால் அது பாண்டிங்தான். டெல்லி அணியின் பயிற்சியாளரான பாண்டிங் தனது அணியை எப்படிப்பட்ட சூழ்நிலைக்கும் தயார் செய்து இருக்கிறார். நேற்று ஆடிய டெல்லி அணியில் பண்ட் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக களமிறங்கிய ரஹானே சரியான பார்மில் இல்லை.

ஷ்ரேயாஸ்

ஷ்ரேயாஸ்

இன்னொரு பக்கம் காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயரும் சரியாக ஆடவில்லை. ஹெட்மேயரும் நேற்று களமிறங்கவில்லை. இன்னொரு பக்கம் மிஸ்ரா, இஷாந்த் சர்மா இரண்டு பேருமே தொடரில் இருந்து வெளியேறிவிட்டனர். இப்படி இருக்க நேற்று டெல்லி தான் விருப்பப்பட்ட அணியுடன் களமிறங்கவில்லை. பல வீரர்களை இழந்துவிட்டுதான் டெல்லி மைதானத்திற்கே வந்தது.

பிரித்வி ஷா

பிரித்வி ஷா

அதிலும் ஓப்பனிங் வீரர் பிரித்வி ஷா நேற்று டக் அவுட் வேறு ஆனார். ஆனால் இத்தனை தடங்கலுக்கு இடையிலும் டெல்லி அணி வெற்றிபெற்றது என்றால் முழுக்க முழுக்க அதற்கு பாண்டிங் போட்டுக்கொடுத்த பிளான் தான் காரணம். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த போது ;பாண்டிங் எப்படி தனது அணி வீரர்களை பயன்படுத்தினாரோ அதேபோல்தான் இப்போதும் டெல்லி அணி வீரர்களை பயன்படுத்துகிறார்.

தவான் எப்படி

தவான் எப்படி

அதிலும் தவானை இவர் மாற்றி உள்ள விதம் பெரிய அளவில் ஆச்சர்யம் அளிக்கிறது. ஒரு பக்கம் பவுலிங் ஆர்ட்ரை வலிமையாக்கிவிட்டு, இன்னொரு பக்கம் பேட்டிங்கையும் பாண்டிங் பலப்படுத்தி உள்ளார். ஒரு வீரர் சொதப்பினாலும் இன்னொரு வீரர் தேவையான நேரங்களில் அதிரடி காட்டி ஆட்டத்தை மாற்றிவிடுகிறார். டெல்லி நேற்று சிஎஸ்கேவை வீழ்த்த முழுக்க முழுக்க பாண்டிங் காரணம்.

தோனி காரணம்

தோனி காரணம்

இன்னொரு பக்கம் சிஎஸ்கேவின் தோல்விக்கு தோனியும் முக்கியமான காரணமாக இருக்கிறார். நேற்று தோனி பவுலிங் ரொட்டேஷன் கொடுத்த விதம் சரியாக இல்லை. இன்னொரு பக்கம் ஜாதவை பவுலிங் செய்யவும் விடவில்லை, பேட்டிங்கும் செய்யவில்லை. இதற்கு ஏன் அவரை அணியில் எடுத்தார் என்றே தெரியவில்லை.

பேட்டிங்

பேட்டிங்

அதேபோல் முக்கியமான நேரங்களில் ஸ்பின் பவுலர்களை தோனி பயன்படுத்தவில்லை. பீல்டிங் செட்டப்பிலும் தோனி சரியாக செயல்படவில்லை. தனிப்பட்ட வகையில் நேற்று தோனி பேட்டிங்கும் சரியாக செய்யவில்லை, கீப்பிங்கிலும் தவான் கேட்சை தோனி விட்டார். சிஎஸ்கே தோல்விக்கு தோனி நேற்று பேட்டியில் நிறைய காரணங்களை குறிப்பிட்டார்.

ஒப்புக்கொள்ள வேண்டும்

ஒப்புக்கொள்ள வேண்டும்

பனி காரணமாக ஆட்டம் மாறிவிட்டது, பிட்ச் மாறிவிட்டது என்றெல்லாம் காரணங்களை அடுக்கினார். ஆனால் உண்மையில் சிஎஸ்கேவின் தோல்விக்கு தோனியின் திட்டங்கள் சொதப்பியதும் காரணம் ஆகும். இதை தோனி மறைக்காமல் ஒப்புக்கொள்ள வேண்டும். இனியும் தவறுகளை மறைக்காமல் தோனி அதை திருத்த முன் வர வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020: Dhoni and Ponting are the main reason for CSK defeat against DC.
Story first published: Sunday, October 18, 2020, 14:15 [IST]
Other articles published on Oct 18, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X