பெரும் ஆபத்தில் ஐபிஎல் .. பணப்பிரச்சினையில் சிக்கிய பிசிசிஐ.. ரசிகர்கள் நினைத்தால் இதுவும் முடியுமா?

மும்பை: ஐபிஎல் தொடர் பெரும அபத்தை நோக்கி சென்று வருவது, நடப்பு சீசனின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த மார் 26ம் தேதி தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் கடந்த ஒன்றரை மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தற்போது வரை குஜராத் டைட்டன்ஸ், லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

5 வீரர்களின் இடம் உறுதி.. 4 துறைகளை செதுக்கும் பிசிசிஐ.. தென்னாப்பிரிக்க தொடருக்கு கலக்கல் அணி ரெடி!5 வீரர்களின் இடம் உறுதி.. 4 துறைகளை செதுக்கும் பிசிசிஐ.. தென்னாப்பிரிக்க தொடருக்கு கலக்கல் அணி ரெடி!

பிசிசிஐ-ன் ஏற்பாடு

பிசிசிஐ-ன் ஏற்பாடு

நடப்பு தொடரே இன்னும் முடிவடையாத சூழலில், அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரபரப்பு உரிமையை விற்பதற்கான பணிகளில் பிசிசிஐ தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதற்கான ஏலம் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகப்படியான அடிப்படை தொகையை பிசிசிஐ நிர்ணயம் செய்யவுள்ளது.

பெரும் சிக்கல்

பெரும் சிக்கல்

இந்நிலையில் அதற்கு பெரும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. அதாவது நடப்பு ஐபிஎல் தொடரை ரசிகர்கள் யாரும் பெரியளவில் பார்க்கவில்லை எனத்தெரியவந்துள்ளது. கடந்த 7ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலான "பார்க்" ரேட்டிங்கில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் 4வது இடத்திற்கு சரிந்துள்ளது. முதல் மூன்று இடங்களில் சன் டிவி, ஸ்டார் மா, ஸ்டார் ப்ளஸ் ஆகியவை உள்ளன.

இளைஞர்களே இல்லை

இளைஞர்களே இல்லை

வழக்கமான பார்வையாளர்களை விட, தற்போது 30% வரை குறைந்துள்ளது தெரியவருகிறது. நடப்பு தொடரின் முதல் 25 போட்டிகளை கணக்கு வைத்து பார்க்கையில் 22 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை 58 சதவீதம் வரை குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது விளம்பர தாரர்களுக்கு பெரும் நஷ்டமாகும்.

பிசிசிஐ-க்கு கடும் நெருக்கடி

பிசிசிஐ-க்கு கடும் நெருக்கடி

விளம்பரதாரர்கள் அனைவரும் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிடம் நஷ்ட ஈடு கேட்டு வருவதாக தெரிகிறது. எனவே அந்த சேனல் நேரடியாக பிசிசிஐயிடம் வரவுள்ளது. இதனால் அடுத்த 5 ஆண்டுக்கான ஒளிபரபரப்பு உரிமைக்கான அடிப்படை தொகையை பல மடங்கு குறைக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் தான் பார்க்கப்படுகிறது. அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட இந்த இரு அணிகளுமே தொடக்கத்தில் இருந்தே சொதப்பி வருகிறது. தற்போது தொடரில் இருந்தும் வெளியேறிவிட்டது. இதனால் ஐபிஎல் மீது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதே கசப்பான உண்மை.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPl 2022: BCCI is in a Struggle after the huge Down on the IPL viewership
Story first published: Saturday, May 21, 2022, 20:14 [IST]
Other articles published on May 21, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X