For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அறிமுக போட்டியே இப்படியா? இளம் வீரரை மோசமாக விமர்சிக்கும் ரசிகர்கள்.. கொல்கத்தா தோல்விக்கான காரணம்!

மும்பை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி தோற்றதற்காக இளம் வீரரை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டியில் நேற்று கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து நாக் அவுட்டானது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 210 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 208 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

கொல்கத்தா அணி தோல்வி

கொல்கத்தா அணி தோல்வி

கொல்கத்தாவின் தோல்விக்கு முக்கிய காரணம் இமாலய இலக்கு தான். லக்னோ அணி ஓப்பனிங் ஜோடி குயிண்டன் டிக்காக் மற்றும் ராகுல் ஆகியோர் 210 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டிக்காக் 70 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 10 பவுண்டரி என 140 ரன்களை குவித்தார். இதே போல கேப்டன் கே.எல்.ராகுல் 51 பந்துகளில் 69 ரன்களை குவித்தார். ஒருவிக்கெட்டை கூட எடுக்க முடியாததே கடின இலக்குகான காரணம்.

Recommended Video

KKR vs LSG கடைசி பந்து வரை பரபரப்பு Lucknow Qualify For Playoffs | #Cricket
 சிக்கிய இளம் வீரர்

சிக்கிய இளம் வீரர்

இந்நிலையில் இந்த தோல்விக்காக கொல்கத்தாவின் அறிமுக வீரர் அபிஜீத் தோமரை ரசிகர்கள் மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றனர். அவரால் தான் அணி தோற்றது என்றும், தோமர் செய்த ஒரு பெரிய தவறு தான் தோல்விக்கு வித்திட்டது என்றும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி வருகின்றனர்.

என்னதான் ஆனது

என்னதான் ஆனது

140 ரன்களை குவித்த குயிண்டன் டிக்காக் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அவுட்டாகி இருக்க வேண்டும். உமேஷ் யாதவ் வீசிய 3ஓவரில் டிக்காக், பந்தை பின்புறமாக சிக்ஸருக்கு தூக்கி அடித்தார். அப்போது அங்கு ஃபீல்டிங்கில் இருந்த அபிஜீத் தோமர், பந்தின் திசையை தவறாக கணித்து சற்று பின்புறமாக தள்ளிச் சென்றுவிட்டார். ஆனால் பந்து முன் பகுதியிலேயே விழுந்துவிட்டது. அழகான கேட்ச்சை டைவ் அடித்தும் தோமர் அந்த கேட்ச்-ஐ தவறவிட்டார்.

பெரிய தவறு

பெரிய தவறு

இந்த கேட்ச்-ஐ தவறவிடும் போது குயிண்டன் டிக்காக்கின் ஸ்கோர் வெறும் 12 ரன்கள் மட்டுமே ஆகும். ஆனால் தோமர் செய்த தவறால் மொத்தமாக 140 ரன்களை அடித்தும் டிக்காக் நாட் அவுட்டாக களத்தில் நின்றார். ஐபிஎல் வரலாற்றில் 3வது பெரிய பார்ட்னர்ஷிப் இதுதான் ஆகும். மற்றொரு புறம் அறிமுக வீரர் கேட்ச்- விடுவது சகஜம் தான் என ஆதரவுக்குரலும் எழுந்து வருகிறது.

Story first published: Thursday, May 19, 2022, 13:53 [IST]
Other articles published on May 19, 2022
English summary
IPL 2022: Fans trolling Abhijeet Tomar after his mistake leads KKR Lose against LSG
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X