For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“எல்லாமே சீக்கிரம் மாறும்..” தென்னாப்பிரிக்க தொடர்.. பிசிசிஐ-க்கு இளம் வீரர் சைலண்ட் வார்னிங்!

மும்பை: இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து இளம் வீரர் ஒருவர் சைலண்டாக மிரட்டல் விடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியுடன் 5 போட்டிகள் டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் தான் பெரும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

போட்டியின் போது திடீர் நெஞ்சு வலி.. தொடர்ந்து 3வது நபரா.. இலங்கை - வங்கதேச தொடரில் என்ன நடக்கிறது?? போட்டியின் போது திடீர் நெஞ்சு வலி.. தொடர்ந்து 3வது நபரா.. இலங்கை - வங்கதேச தொடரில் என்ன நடக்கிறது??

இந்திய அணி

இந்திய அணி

இந்த தொடருக்கான அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஓய்வுக்கு சென்றுள்ளதால், கே.எல்.ராகுல் தலைமையில் புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி இளம் வீரர்கள் இஷான் கிஷான், ருதுராஜ் கெயிக்வாட், உம்ரான் மாலிக், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர் ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சீனியர்களின் கம்பேக்

சீனியர்களின் கம்பேக்

இந்திய அணியில் நீண்ட நாட்களாக புறக்கணிக்கப்பட்டு வந்த சீனியர் வீரர்கள் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முற்றிலும் புதிய படை உருவாக்கப்பட்டுள்ளதால், இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க காத்துள்ளனர்.

இளம் வீரரின் அதிருப்தி

இளம் வீரரின் அதிருப்தி

இந்நிலையில் வாய்ப்பு கிடைக்காத நிதிஷ் ராணா மட்டும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது. நீண்ட நாட்களாக இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வரும் ராணா, இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார்.அதில், அனைத்து விஷயங்களும் விரைவில் மாறும் என இந்திய தேசியக் கொடி எமோஜியை பதிவிட்டுள்ளார். மறைமுகமாக பிசிசிஐ-க்கு சவால் விடுத்துள்ளார்.

Recommended Video

IND vs SA தொடரில் Dinesh Karthik விளையாடுவதில் சிக்கல் | #Cricket
அசத்தல் புள்ளிவிவரம்

அசத்தல் புள்ளிவிவரம்

நிதிஷ் ராணா இதுவரை இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் அதிலும் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. ஐபிஎல்-ஐ பொறுத்தவரையில் 91 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 2,181 ரன்களை குவித்துள்ளார். அவரின் சராசரி 28 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 23, 2022, 19:39 [IST]
Other articles published on May 23, 2022
English summary
IPl 2022: Nitish Rana shows is upset after being left out of South Africa T20Is
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X