ரசகுல்லா சாப்பிடும் நேரம்... ரொம்ப ரொம்ப ஸ்வீட்... கேகேஆருக்கு பதிலளித்த சிஎஸ்கே

சென்னை : கொல்கத்தாவில் நடைபெற்ற ஏலத்தில் குறைந்த அளவு தொகையுடன் களமிறங்கினாலும் பியூஷ் சாவ்லா உள்ளிட்ட 4 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.

ஏலத்தையடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் தன்னுடைய மகிழ்ச்சியை பகிரும்வகையில், இது ரசகுல்லா சாப்பிடும் நேரம் என்று சிஎஸ்கே பதிவிட்டிருந்தது.

இதையடுத்து ரசகுல்லா நல்லா இருக்கா என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பதில் டிவீட் போட, அதற்கு சிஎஸ்கே, ரொம்ப ரொம்ப ஸ்வீட் என சிரிப்பு எமோஜியுடன் பதிலளித்தது ரசிகர்களை குதூகலப்படுத்தியது.

தினேஷ் கார்த்திக் தான் வேணும்.. என்ன வேணா பண்ணுவோம்.. அடம்பிடிக்கும் கொல்கத்தா!

4 வீரர்களை ஏலமெடுத்த சிஎஸ்கே

4 வீரர்களை ஏலமெடுத்த சிஎஸ்கே

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020 ஏலத்தில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், பியூஸ் சாவ்லா, சாம் குரான் உள்ளிட்ட 4 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.

சிஎஸ்கேவின் மகிழ்ச்சிப் பதிவு

சிஎஸ்கேவின் மகிழ்ச்சிப் பதிவு

ஏலத்தையடுத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ரசகுல்லா சாப்பிடும் நேரம் என்று சிஎஸ்கே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

பதிலளித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

சிஎஸ்கேவின் இந்த பதிவை அடுத்து தமிழில் பதிவிட்ட கேகேஆர், ரசகுல்லா நல்லா இருக்கா என்று கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்த சிஎஸ்கே, ரொம்ப ரொம்ப ஸ்வீட் என்று தெரிவித்திருந்தது. இதற்கு பதில் டிவீட் போட்ட கேகேஆர், தங்களை விட ஸ்வீட்டா இருக்கா என்று கேள்வி எழுப்பியது.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகளும் டிவிட்டர் மூலம் தமிழில் உரையாடிய இந்த பதிவுகள் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. பியூஸ் சாவ்லாவிற்கு அதிக தொகை கொடுத்து புக் செய்தது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
After IPL 2020 Auction CSK and KKR exchanged pleasantries on twitter in Tamil
Story first published: Friday, December 20, 2019, 17:41 [IST]
Other articles published on Dec 20, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X