For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எஃப்.சி கோவா உரிமையாளர் கோலி சொன்ன அந்த விஷயம்.. மாந்தர் ராவ் தேசாய் சிறப்பு பேட்டி!

Recommended Video

FC Goa player Mandar Rao Dessai Special Interview

கோவா : மாற்றம் என்பது ஒருபோதும் எளிதானது அல்ல. அதுவும் 27 வயதில் மாற்றம் என்பது முடியாததாக இருக்கும்.

ஆனால், எஃப்.சி கோவா அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ லோபரா கடந்த சீசனில் லெஃப்ட் பேக் நிலையில் விளையாடச் சொன்னபோது மந்தர் ராவ் தேசாய்க்கு வேறு வழியில்லை.

ISL 2019-20 : FC Goa player Mandar Rao Dessai Special Interview

மந்தர் அந்த 'புதிய'நிலையில் சிறந்து விளங்கி தேசிய அணியில் இடம் பிடித்தார். அவர் தனது புதிய பங்கு குறித்து ஐ.எஸ்.எல் மீடியாவுக்கு பேட்டி அளித்தார்.

நீங்கள் லெஃப்ட் வீரராக சிறந்து விளங்கும்போது லெஃப்ட் பேக் நிலையில் விளையாடுவதை விரும்பினீர்களா?

கடந்த ஆண்டு ஸ்பெயினில் நடந்த பிரீசீசனின் போது, பயிற்சியாளர் செர்ஜியோ லோபரா லெஃப்ட் பேக் நிலையில் விளையாட வேண்டும் என்று என்னிடம் சொன்னார். ஸ்பெயினில் நடந்த முதல் ஆட்டத்தில் என்னை களமிறக்குவதற்கு முன்பு, என்னால் அவ்வாறு விளையாட முடியுமா ? என்று லோபரா கேட்டார். கடந்த சீசன்களில் விளையாடிய நிலை இதுவல்ல என்பதால் நான் தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். நான் தொடர்ந்து லெஃப்ட் பேக்கில் விளையாடி சிறப்பாக செயல்பட்டால், தேசிய அணியிலும் அதே நிலையில் விளையாட முடியும் என பயிற்சியாளர் என்னிடம் தெரிவித்தார்.

இது உண்மையாகிவிட்டது, தற்போது தேசிய அணியிலும் நீங்கள் லெப்ட் பேக்கில் ஆடுகிறீர்கள்!

கத்தாருக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். அப்போது ஆசிய சாம்பியன்களை எதிர்கொள்வது கடினமான பணியாக இருந்தது. அந்த ஆட்டத்தில் நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சித்தோம், நல்ல ஒரு ஆட்டத்தை அரங்கேற்றினோம். டிஃபெண்டர்களுக்கும் , மிட்ஃபீல்டர்களுக்கும் இடையில், நாங்கள் சிறப்பாக விளையாடினோம். எனவே அவர்களுக்கு எதிராக ஒரு நல்ல முடிவு கிடைத்தது.

ISL 2019-20 : FC Goa player Mandar Rao Dessai Special Interview

நீங்கள் இப்போது 27 வயதில் உள்ள நிலையில் மாற்றம் என்பது எவ்வளவு கடினமாக உணர்கிறீர்கள்?

அது அந்தந்த வீரர்களை பொறுத்தது. என்னைப் பொறுத்தவரை, லெஃப்ட் பேக்கில் விளையாடுவது புதிய சவாலாக இருந்தது. எனது முழு விளையாட்டையும் மாற்ற வேண்டியிருந்தது. ஆட்டத்தை மேம்படுத்த நிறைய வீடியோக்களை நான் ஆன்லைனில் பார்த்தேன்.

எஃப்சி கோவா அணியின் இணை உரிமையாளர் விராட் கோஹ்லி கால்பந்து வீரர்களின் உடல் திறனுக்கு அதிக முக்கியத்துவம் தர வலியுறுத்துகிறார். அணியின் உரிமையாளரே விளையாட்டு வீரராகவும் இருக்கும்போது இதை எப்படி உணர்கிறீர்கள்?

அவர் கால்பந்து வீரர்களுடன் பேசும்போது நிறைய நம்பிக்கையான வார்த்தைகளை கூறி ஊக்குவிக்கிறார். மேலும் அவர் வீரர்களையும், கிளப்பையும் நம்புகிறார். ஏற்கனவே எஃப்சி கோவா அணி ஐஎஸ்எல் சீசனில் நன்றாக விளையாடி வருகிறது. ஒரு கால்பந்து கிளப் என்பது எப்போதும் முதல் நான்கு இடங்களில் இருப்பது எளிதல்ல, ஆனால் கோவா அணி நிலையானது. கிரிக்கெட் வீரரை விட கால்பந்து வீரர் அதிக உடல் திறன் கொண்டு இருக்க வேண்டும் என அவர் என்னிடம் கூறியுள்ளார். ஏனெனில் இதில் ஓடுவது அதிகம் என அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் விராட் கோலியும் மிகச்சிறந்த உடல் தகுதி கொண்டவர்.

நீங்கள் எஃப்.சி கோவா அணிக்காக கையெழுத்திட்டபோது நீங்கள் ஒரு இளைஞராக இருந்தீர்கள், இப்போது ஒரு கேப்டனாக இருக்கிறீர்கள்!! இந்த கிளப்பில் உங்கள் பங்கு எப்படி உருமாறியது?

எஃப்.சி கோவா அணியில் மட்டுமல்ல, டெம்போ ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இருந்தபோதும் கூட நான் சீனியர்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன் என்கிறார் மந்தர். உலகளாவிய கால்பந்து ஜாம்பவானான ஜிகோவால் பயிற்சியளிக்கப்பட்டதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்களை ஆதரிக்கும் ஒரு மிகப் பெரிய ரசிகர் கூட்டத்திற்கு முன்னால் நீங்கள் விளையாடும்போது, தேசிய அணியில் இருப்பதை நீங்கள் பெருமையுடன் அனுபவிக்க முடியும். முன்னாள் எஃப்சி கோவா வீரர்கள் ராபர்ட் பைர்ஸ் மற்றும் லூசியோ எனது விளையாட்டை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தனர், மேலும் இந்த கிளப்பில் வரவிருக்கும் இளைஞர்களுக்கும் அவர்கள் இதைச் செய்வார்கள் என்று நம்புகிறேன்.

Story first published: Friday, October 18, 2019, 11:33 [IST]
Other articles published on Oct 18, 2019
English summary
ISL 2019-20 : FC Goa player Mandar Rao Dessai Special Interview
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X