ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வா ? ஸ்ட்ரைக் ரேட் தொடர்பான கேள்வி.. கூலாக பதில் சொன்ன வில்லியம்சன்

ஆக்லாந்து : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி நாளை ஆக்லாந்தில் பரீட்சை நடத்துகிறது.

இந்தத் தொடர் இந்திய அணியை விட நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனுக்கு மிகவும் முக்கியமான தொடராகும்.

ஏனென்றால் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு வில்லியம்சன் ஆறு ஒருநாள் போட்டியில் மட்டும் தான் விளையாடி இருக்கிறார்.

இந்தியா Vs நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி -பிளேயிங் லெவன் என்ன? வானிலை நிலவரம், பிட்ச் ரிப்போர்ட்இந்தியா Vs நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி -பிளேயிங் லெவன் என்ன? வானிலை நிலவரம், பிட்ச் ரிப்போர்ட்

ஸ்ட்ரைக் ரேட் சரிவு

ஸ்ட்ரைக் ரேட் சரிவு

இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் வெறும் 56 என்ற அளவில் தான் இருக்கிறது. வில்லியம்சன் தற்போது அதிரடியாக விளையாடுவது இல்லை என்று கூறி ஐதராபாத் அணி அவரை நீக்கியது. டி20 உலககோப்பையில் நியூசிலாந்தின் தோல்விக்கு வில்லியம்சன் ஸ்ட்ரைக் ரேட்டும் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 ஆசைப்படுகிறேன்

ஆசைப்படுகிறேன்

இந்தியாவை சமாளிக்க வேண்டும் என்றால் நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் , டாம் லாத்தம் ஆகியோர் பெரிய இன்னிங்ஸ் ஆடினால் மட்டுமே அதற்கு வாய்ப்பு இருக்கும்.இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வில்லியம்சன், நான் ஒரு நாள் , டெஸ்ட், டி20 என மூன்று போட்டிகளிலும் விளையாட ஆசைப்படுகிறேன். அதற்காக உழைத்து வருகிறேன். என்னுடைய பேட்டிங்கில் எப்படி எல்லாம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பது குறித்து யோசித்து வருகிறேன்.

முக்கியத்துவம் இல்லை

முக்கியத்துவம் இல்லை

நான் நன்றாக விளையாட வேண்டும் என்ற உத்வேகம் நிச்சயம் இருக்கிறது. அது தான் முக்கியம். ஒருநாள் கிரிக்கெட் அதன் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. அதனால் தான் பார்வையாளர்கள் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு அதிக அளவில் மைதானங்களுக்கு வருவதில்லை. ஒருநாள் கிரிக்கெட்டை மீண்டும் எப்படி அனைவரும் விரும்பக் கூடிய விளையாட்டாக மாற்ற வேண்டும் என்பது குறித்து ஐசிசி யோசிக்க வேண்டும்.

விதிகளை மாற்றுங்கள்

விதிகளை மாற்றுங்கள்

தேவைப்பட்டால் விதிகளை இன்னும் சுவாரசியமாக மாற்றலாம். மார்ட்டின் குப்தில் இன்னும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன். அவர் உலகம் முழுவதும் உள்ள லீக் தொடரில் விளையாட செல்கிறார். அதன் காரணமாகத்தான் நியூசிலாந்தின் ஊதிய ஒப்பந்தத்தில் அவர் இடம்பெறவில்லை. ஐபிஎல் போட்டியில் நான் எந்த அணிக்கு விளையாட உள்ளேன் என்பது குறித்து எனக்கு தெரியாது. அது என் முடிவு கிடையாது. அணி நிர்வாகிகள் தங்களுக்கு எது தேவையோ அது குறித்து முடிவெடுப்பார்கள். இதனால் அது என் கைகளில் இல்லை.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Kane williamson opens up about his strike rate issue ahead of india odi series ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வா ? ஸ்ட்ரைக் ரேட் தொடர்பான கேள்வி.. கூலாக பதில் சொன்ன வில்லியம்சன்
Story first published: Thursday, November 24, 2022, 17:27 [IST]
Other articles published on Nov 24, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X